Friday 9 December 2016

அணையாத தீபம் ஜெயலலிதா & சோ

அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளார்கள் இங்கே யாரோ யார் யாரோ? 

திரு . சோ அவர்கள் நடித்து இயக்கிய, முதல்வர் ஜெயலலிதா நடித்த யாருக்கும் வெட்கமில்லை என்ற படத்தின் பாடலை தற்போது பதிவு செய்வது பொரு த்தமாகவும் , இருவருக்கும் செய்யக் கூடிய அஞ்சலியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.


இருளில் ஓளி தீபம் ஏந்தி வரும் முதல்வரின் நடிப்பும் பாவனையும், அந்த நடிப்புக்கேற்ப இயைந்து வரும் சுசீலாம்மாவின் குரலும் பாடலின் தரத்தை எங்கேயோ கொண்டு போகின்றன.

லேசான சோகம் இழையோடும் சுசீலா அவர்களின் கணீர் குரலும், மென்மையான நடிப்பை வெளிப்படுத்தும் ஜெயலலிதா அவர்களின் இனிய தோற்றமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

கால் போன ஜீவனை தோள் மீது வைத்து காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்,... பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்.. என பாடும் போது சில விஷயங்கள் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நபி நாயகம் தன் நகர் மாறி சென்றார்.....
எல்லோர்க்கும் தாயான மாகாளி சக்தி.....
கலை மாது மேரி ஓர் விலைமாது என்று.... 

என்று பாடி பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என அனைத்து மதங்களையும் ஒரு பாடலில் இணைத்து இருப்பார் பாடலாசிரியர். மத ஒற்றுமையை ஒரு பாடலில் கூறியதுவும் இப்பாடலுக்கு ஒரு சிறப்பே. 


இந்த பாடலுக்கு இசை வழங்கியவர் ஜி.கே. வெங்கடேஷ் என கேள்வி பட்டிருக்கிறேன். பாடலாசிரியர் யார் என தெரியவில்லை எனக்கு. 

இரு பெரும் ஆத்மாக்கள் இனைந்து உருவாக்கிய படமும் பாடலும் மற்றொரு பெரும் பாடகியின் குரலால் ஜொலிக்கின்றன. காணொளிக் காட்சி அத்தனை திருப்தியாக இல்லை. 

RIP AMMA & CHO.


https://youtu.be/H9Jq2o6AUV4

அமுதம் தொடரும்...

No comments:

Post a Comment