Tuesday 29 November 2016

சூர்ய காந்த கல் படவில் ஆரிய புத்ரண்டே பூமடியில்

"சூர்ய காந்த கல் படவில்
ஆரிய புத்ரண்டே பூமடியில்
நிண்ட ஸ்வப்னங்கலுத்தி கிடத்தி உறக்கு ஸ்வயம்ப்ரபே தன்கே உறக்கு உறக்கு"

தாலாட்டு என்றாலே அம்மாதான். நம்ம்ம் பெற்ற தாயை மட்டுமல்ல நாம் ணைவரும் பெறாமல் பெற்ற தாய், நம்மனைவருக்கும் 60 ஆண்டுகளாக தாலாட்டு பாடும் தாய் சுசீலா அம்மாதான். குழந்தைதையோ சிறுவரோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் தாலாட்டு பாடி உறங்க வைக்கும் தன்மை அவர் குரலுக்கே உண்டு.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த பாடல். மலையாள திரையுலகின் பொற் கால பாடல் கூட்டணியில் உருவான பாடல் இது. புனர்ஜன்மம் படத்தில் வயலார் இயற்ற தேவராஜன் இசையமைக்க அம்மா இசைத்த இனிய கானம்.

"சம்சார சாகர..... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
கை எத்துமென்கிலா கல்விளக்கின்
திரி தாழ்த்து
திரி தாழ்த்து" என முடிக்கும் போது காற்றும் கடலும் ஸ்தம்பித்து நிற்பது போன்ற உணர்வை நமக்கு தன் மதுர குரல் மூலம் வழங்குகிறார்.

கல் விளக்கின் திரி தாழ்த்து திரி தாழ்த்து என்று அவர் இழையும் போது நாமே சென்று அந்த கல்விளக்கின் திரியை இறக்கி விடலாமா என்று நினைக்க தோன்றுகிறது.

"சிந்தூர புஷ்ப பராகங்கள் சார்த்தி நின் சீமந்தினியாயி.... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
" சுவர்க்கத்தில் நின்னொரு கற்பக பூ மழை 
சொரியூ மழை சொரியூ "
என முடிக்கும் போது கீழே கடல் அலயடிக்க மேலே மெல்லிய மழை பொழிய சில்லென்று நிற்கும் ஒரு உணர்வு பிரவாகம் ஏற்படுவதை யாராலும் உணராமலிருக்க முடியாது.

ஜயபாரதியின் மிக அழகான உயிரோட்டமிக்க தத்ரூபமான நடிப்பும் இப்பாடலுக்கு உயிர் கொடுக்கிறது. நாமும் சூர்ய காந்த கல்படகில் ப்ரயானித்த சுக அநுபவத்தை அம்மாவின் குரல் மூலம் இப்பாடல் தருகிறது. கேட்போம் இன்பமடைவோம்.

அமுதம் தொடரும்.....


https://youtu.be/mid__haH5Wg

No comments:

Post a Comment