" டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
என்னை விட்டு போகாதே மன்னன் உன்னை என் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூயூயூயூயூயூயூயூ!"
ப்ரியா திரைப்படத்தில் இளையராஜா இசையில் சுசீலா அவர்கள் பாடியது. முதன் முதலில் தமிழ் திரை உலகில் டிஜிட்டல் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம்.
அழகான ஸ்ரீதேவி, அருமையான வண்ணப்படம், பாடலின் ஆரம்பத்தில் அசத்தும் இசை, என ஒவ்வொன்றும் மிக சிறந்த முறையில் அமைந்த பாடல். நீச்சல் உடையில் ஸ்ரீதேவி வரும்போது அம்மாவின் குரலில் ஆனந்தம் பறக்கும், அரங்கில் விசில் பறக்கும். முதல் சரணத்தில் ஐ லவ் யூயூயூயூயூயூயூயூ என்று அவர் இழுக்கும் போது ஒரு வெஸ்டர்ன் பாடகியை போல மிக அருமையாக ஈசாய்ப்பாரே! அப்பப்பாப்பா! இனிமை இனிமை இனிமை அள்ளும் . குரலோ துள்ளும் .
" யாரும் சொல்லாமல் நானே ஆசை என்றால் என்ன வேகம் என்றுகண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா ஆசை கொள்ள ஓடிவா
கனி தரும் கோடி இதை அணைத்திட பூஞ்சோலை வா
ஐ லவ் யூயூயூயூயூயூயூயூ!"
ஐயோ ஐயோ கொள்ளை இனிமை நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் . மிக அதிகமாக வர்ணிக்கிறேன் என்று இதை படிப்பவர் எண்ணலாம் . "இசை உலகின் இனிய பு துமை ஆன வாசலில் அந்த வடுகுப் பெண் நின்று கொண்டு இருந்தார் " என்று திரை இசை அலைகள் என்ற நூலில் எழுத்தாளர் வாமனன் அவர்கள் வர்ணிப்பதை படித்த பின் இந்த பெண்ணை வடுகுப்பெண் என்று எண்ண தோன்றும்.
இந்த திரை படத்துக்கு சில ஆண்டுகட்கு முன் ஊட்டி வரை உறவு என்ற படத்தில் "பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓஒ ஓஒ ஓஒ "என்று இசைப்பாரே அதே இனிமை 10 ஆண்டுகளுக்கு பின்னும் தொடர்கதையாகி உள்ளது என்றால் மிகையில்லை .
இசைக்குயிலின் இனிய ஆலாபனையில் இப்பாடல் ஒரு மேலே கல் என்றால் மிகையில்லை .
"காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம் அங்கே... ... "
இவ்வரிகளையே நாம் இவ்வாறு மாற்றலாம். அம்மாவின் குரல் கேட்கும் போது என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் என்று.நான் சொல்வதில் தவறுகள் இல்லையே. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இப்பாடலை நீங்களும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்வதில்
சுரப்பது ஆனந்தம்!
பிறப்பது பேரின்பம்!!
இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இதே பாடலை கன்னட மொழியில் வேறு ஒருவர் பாட கேட்கும் போதுதான் இசை அமைப்பாளர்கள் ஏன் இப்படி அம்மாவை விட்டு விட்டு வேறொருவரை பாட வைத்து பாடத்தையே சொதப்புகிறார்கள் என்ற எண்ணம் நம் நாணத்தில் நிழலாடுவதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
அமுதம் தொடரும்....
No comments:
Post a Comment