Saturday, 12 November 2016

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. "

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. " 

கட்டிலா தொட்டிலா என்ற திரைப்படத்தில் அம்மா பாடிய பாடல். சிவகுமாரும் கல்பனாவும் நடித்துதுள்ளனர். இசை வி. குமார். ஒரு விசித்திரமான நடன அசைவுடன் இந்த பாடலை சுசீலாம்மா பாடும் போது ஒரு மோக மயக்கம், கிறக்கம் கேட்போருக்கு கட்டாயம் ஏற்பட்டே தீரும். அதிலும் அவர் பாடலின் குரலின் ரசிகர் என்றால் கேட்கவே தேவை இல்லை.
" ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்'என தொடங்கி ஒரு ஹம்மிங் இசைப்பார் பாருங்கள். இல்லை இல்லை கேளுங்கள். அப்பப்பா! நமக்கே ஒருவித மயக்கம் அம்மாவிடம் அவர் தேன் குரலிடம் வந்தே தீரும்.
காதல் கொண்ட பெண் தன் நிலையை "வாய் கொஞ்சம் வெளுக்கும் விழி கொஞ்சம் சிவக்கும் நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்' காதலனிடம் கூறுவதை ஒரு 18 வயது பெண்ணின் காதல் குரலில் கன்னி குரலில் அம்மாவாக பல பாடல்களில் நமக்கெல்லாம் தாலாட்டு பாடிய அம்மா பாடும் போது அடடா அந்த இசை பொற் கால தேவதை நம்மை மயங்க வைக்கிறாள்.
காதலன் தோட்ட அந்த ஸ்பரிசம் அவளை என்னமோ செய்கிறது
"நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல் ஓடும் காரணம் நால்விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய் ஆடும் காரணம்" இவ்வரிகளை கேட்டால் நம் நாடி நரம்பில் ஒரு இசை மின்னல் பாய்கிறது.

'ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க எழுதும் மன்னவா எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ முழுதும் சொல்லவா. மடித்தான் மஞ்சம் மலர் மஞ்சம் இதழ் தான் கிண்ணம் மது கிண்ணம் இடைத்தான் மேடை மணிமேடை இன்னும் என்ன சுகம் தேவை பருவங்கள் நமக்காக" 
என நம்மியும் பருவ போதையில் ஆழ்த்தும் அந்த வசீகரம் அவர் குரலில் மட்டுமேயன்றி வேறு யார் குரலிலும் கேட்க முடியாத பொக்கிஷம்.

இந்த பொக்கிஷம் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமது பாக்கியம். அந்த இனிய குரலை புகள்வதே சிலாக்கியம். ஒரு வித மயக்கம் சுசீலாம்மாவின் குரலில் எனக்கும்ம்மம்மம்..

அமுதம் தொடரும்
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

No comments:

Post a Comment