" கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு"
1951 இல் கன்ன தல்லி திரைப்படத்தில் எந்துக்கு பிலிச்சாவ் ஏந்துக்கு? என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆன அந்த பெண்மணி தென் இந்தியாவையே தன் இசை குடை கீழ் ஆண்டு விட்டு அமைதி காணும் நேரத்தில் இசைப்புயலே நான் என்று வந்த A.R.Rahman இசையில் தன் புதிய முகத்தை புதிய முகம் படத்தில் பாடிய பாடல் இது.
முதலில் வரும் அந்த ஆலாபனையே நம்மை கிறங்க வைக்கும். 1951 க்கும் 1993 க்குமிடையே சுமார் 40 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகள் திரை உலகில் நிலைத்து நிற்பது ஒரு சாதனை என்றால், தன குரல் இனிமையை தக்க வைத்து கொள்வது பெரும் சாதனை. அதிலும் தன்னை ஓரம் கட்ட எண்ணும் சில இசை அமைப்பாளர்களிடையே தன் இருப்பை தக்க வைத்து புதிதாய் வந்த புயலை, இசை புயலை தன்னை நாடி பாட வைக்க செய்வது பெரும் சாதனை மட்டுமல்ல அரும் சாதனை.
புதிய முகத்தில் பாடிய இந்த பழைய முகம் குரலில் மட்டும் நமக்கு அறிமுகம். இனிமையில் நமக்கு தெரி முகம்.
கணவனுடன் கொஞ்சி விளையாடம் இளம் பெண்ணின் நாணத்தை இதத்தை அப்படியே தன் குரலால் பதிவு செய்கிகிறார் சுசீலா.
"ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு
அன்பான முத்தத்தில் கலை ந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிழை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு"
என அட்சர சுத்தமாக பாடுவது சிலருக்கே வாய்த்த வரம்.
' மழை நின்ற பின்னாலும் இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இறவோடுத்தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நன் அழகு"
கூடல் முடிந்த பின் இயற்கையை மகிழ்வூட்டும் விதமாக கவி வைரமுத்து எழுதிய பாடலை மேலும் மெருகூட்டுகிறார்.
இயற்கை என்றும் மாறாதது
இமயம் என்றும் மாறாதது
அதுபோல் தன் குரல்
இனிமையும் என்றும் மாறாதது
என நமக்கு நிரூபிக்கிறார் சுசீலா.
அவருடைய இனிய பல பாடல்களில் இதுவும் சிறந்ததுஎன்றால் மறுக்கவா போகிறீர்கள்?
அமுதம் தொடரும்......
https://youtu.be/gzjIZdTThvs
No comments:
Post a Comment