Tuesday 29 November 2016

சூர்ய காந்த கல் படவில் ஆரிய புத்ரண்டே பூமடியில்

"சூர்ய காந்த கல் படவில்
ஆரிய புத்ரண்டே பூமடியில்
நிண்ட ஸ்வப்னங்கலுத்தி கிடத்தி உறக்கு ஸ்வயம்ப்ரபே தன்கே உறக்கு உறக்கு"

தாலாட்டு என்றாலே அம்மாதான். நம்ம்ம் பெற்ற தாயை மட்டுமல்ல நாம் ணைவரும் பெறாமல் பெற்ற தாய், நம்மனைவருக்கும் 60 ஆண்டுகளாக தாலாட்டு பாடும் தாய் சுசீலா அம்மாதான். குழந்தைதையோ சிறுவரோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் தாலாட்டு பாடி உறங்க வைக்கும் தன்மை அவர் குரலுக்கே உண்டு.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த பாடல். மலையாள திரையுலகின் பொற் கால பாடல் கூட்டணியில் உருவான பாடல் இது. புனர்ஜன்மம் படத்தில் வயலார் இயற்ற தேவராஜன் இசையமைக்க அம்மா இசைத்த இனிய கானம்.

"சம்சார சாகர..... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
கை எத்துமென்கிலா கல்விளக்கின்
திரி தாழ்த்து
திரி தாழ்த்து" என முடிக்கும் போது காற்றும் கடலும் ஸ்தம்பித்து நிற்பது போன்ற உணர்வை நமக்கு தன் மதுர குரல் மூலம் வழங்குகிறார்.

கல் விளக்கின் திரி தாழ்த்து திரி தாழ்த்து என்று அவர் இழையும் போது நாமே சென்று அந்த கல்விளக்கின் திரியை இறக்கி விடலாமா என்று நினைக்க தோன்றுகிறது.

"சிந்தூர புஷ்ப பராகங்கள் சார்த்தி நின் சீமந்தினியாயி.... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
" சுவர்க்கத்தில் நின்னொரு கற்பக பூ மழை 
சொரியூ மழை சொரியூ "
என முடிக்கும் போது கீழே கடல் அலயடிக்க மேலே மெல்லிய மழை பொழிய சில்லென்று நிற்கும் ஒரு உணர்வு பிரவாகம் ஏற்படுவதை யாராலும் உணராமலிருக்க முடியாது.

ஜயபாரதியின் மிக அழகான உயிரோட்டமிக்க தத்ரூபமான நடிப்பும் இப்பாடலுக்கு உயிர் கொடுக்கிறது. நாமும் சூர்ய காந்த கல்படகில் ப்ரயானித்த சுக அநுபவத்தை அம்மாவின் குரல் மூலம் இப்பாடல் தருகிறது. கேட்போம் இன்பமடைவோம்.

அமுதம் தொடரும்.....


https://youtu.be/mid__haH5Wg

Wednesday 16 November 2016

தொடுவானம் ரொம்ப தூரம் தொட்டு பார்க்க ஆசை உனக்கு

" தொடுவானம் ரொம்ப தூரம்
தொட்டு பார்க்க ஆசை உனக்கு கையோடு சேருமோ
இல்லை கனவாக மாறுமோ!"

அவள் பாரதி கண்ட புதுமைப் பெண். கொடுமை கண்டால் பொங்கி எழுவாள். அதனால் சிறையில் 7 ஆண்டு அடைபட்டு பரோலில் வெளி வந்த பின் அவளை சமூகம் குடும்பம் நடத்தும் முறையை எண்ணி பாடும் பாடல்.

நியாய தராசு படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சுசீலா அவர்கள் பாடிய பாடல். நடித்தவர் ராதா.

சிறந்த படமாகவும் சிறப்பான பாடலாகவும் இருந்தாலும் தோல்விப் படங்களில் இருக்கும் அருமையான பாடல்களும் கவனம் பெறாமல் போகும் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த உதாரணம்.

"சுடுகின்ற கோடையில் வெகு தூரம் நான் நடந்தேன்
சுகமான மேகமே மழை நீரை நீ கொடுத்தாய்
தண்ணீர் எந்தன் கையில் வந்தும் தாகம் தீர்க்க யோகம் இல்லை
தண்ணீர் தாகம் இல்லை கண்ணீர் சாபமா"

வாழ்வின் சோகம்சொந்தங்கள் சந்தர்ப்பவாதம் சமூகத்தின் புறக்கணிப்பு இவை அனைத்தையும் கலந்து பாடும் நாயகியின் உணர்ச்சிகளை தன் குரலில் அச்சு அசல் பிசகாமல் ப்ரதிபலிப்பார் அம்மா.


"பொய்யான வேடங்கள்
பல போலி பாத்திரங்கள்.
புரியாத மேடையில் பல பொம்மை நாடகங்கள்.
கானல்நீரில் தூண்டில் போட்டு
கனவில் பாடும் காதல் பாட்டு
வாழ்வே சாபமா
பெண்ணின் அன்பே பாவமா'

பாலைவனத்தில் காணும் சோலைவனம் போல் கிடைக்கும் ஒரு நட்பும் நிலைக்குமோ என்ற ஏக்கமும், சொந்தங்களின் நடிப்பால் ஏற்படும் தாக்கமும் சோகம் இழை ஓட அருமையாக பாடி இருப்பார் அம்மா.

தன்னை புரிந்து கொள்வோர் யருமில்லையோ என்ற துயரம்தான் குரலில் தொனிக்க அம்மா பாடும் இப்பாடஎன்னை மட்டுமல்ல அம்மாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்றால் இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அமுதம் தொடரும்.......


https://youtu.be/BJWC5c0wvA4
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

Monday 14 November 2016

வட பத்ர சாயிகி வரஹால லாலி

" லாலி லாலி லாலி லாலி
வட பத்ர சாயிகி வரஹால லாலி !
ராஜீவ நேத்ருணிக்கி  ரத்தநால லாலி!
முறி பால கிரிஷ்ணுடுகி  முத்தியால லாலி!
ஜகமேலு ஸ்வாமிக்கி பகடால லாலி!


                        1986 இல் வெளி வந்த ஸ்வாதி முத்யம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் , இசையரசி பாடிய பாடல்.  நடித்தவர் ராதிகா .  குரல் இசைக்கேன் பிறந்த அம்மாவின் மிக சிறப்பாந பாடல்களில் ஒன்று.  மேலும் அம்மாவின் பாடல்களின் ஸ்பெஷாலிட்டி என்றாலே தாய்மை ததும்பும் அவர் இனிய குரல்.  அதை மீண்டும் நிரூபித்த பாடல் இது.

                        குழந்தை கிருஷ்ணனாக தன் குழந்தையை பாவித்து தாலாட்டி பாடும் தாலாட்டு பாடல் இது.  அம்மாவின் பாடல்களை சும்மா கேட்டாலே ஏற்படும் மகிழ்வு தாலாட்டு பாடல்களால் இன்னும் இரட்டிப்பு ஆகும் என்பது 
நம்மனைவருக்கும் தெரியும் அல்லவா?!  இந்த பாடலும் அதே ரகத்தை சேர்ந்தது. 

     ஆலிலை மேல் துயில் கொண்ட கண்ணனுக்கு லாலி, தாமரைக்காண்ணானுக்கு லாலி , பாலக்ரிஷ்ணனுக்கு லாலி, என்றெல்லம் தன் குழந்தையை பாராட்டும் தயாகாவே மாறி பாடுகிறார் அம்மா.  மேலும் யாரெல்லாம் தன்  பிள்ளையை பாராட்டுகிறார்கள் எண்டு அவர் போடும் பட்டியலை கேளுங்கள்.  

" கல்யாண ராமுடுக்கி  கௌசல்ய லாலி!  யதுவம்ச விபுனி கி யசோத லாலி !!
கரிராஜ முகுனிகி கிரி த னய லாலி! பரமாத்மா பவுரினிக்கி பரமாத்மா லாலி!!"

இவ்வாறெல்லாம் புகழ்ந்து  விட்டு, 

 ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ  ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ  என ஒரு ஆராரிரோ இசைப்பார் பாருங்கள் தூங்காத குழந்தை கூட தூங்கி விடும் .

"அலமேலு பதிக்கி அன்னமய்ய லாலி !  
கோதண்ட ராமுடுக்கி கோபைய்ய லாலி!!
ஷ்யாமளங்குனிக்கி ஷ்யாமய்ய ய்ய  லாலி ! 
யாதவ விபு ணிக்கி தியாகய்ய லாலி !!"


என்று தாலாட்டின் சிகரமாக அமைந்த இந்த பாடல் தெலுகு திரையுலகில் மறைக்க , மறக்க முடியாத பாடல்.


        இதன் தமிழ் பாதிப்பும் மிக அழகாக  வைரமுத்துவால்  இயற்றப்பட்டு , அம்மாவால் பாடப்பட்டு  புகழ் பெற்றது என்றாலும்,  மூல மொழியில் கேட்கும் சுகமே தனி என்பதை அனைவரும் ஒப்பு கொள்வார்கள்.  ஏனெனில் அது சுந்தர தெலுங்கு அல்லவா?!?

          எது எப்படி இருப்பினும் அம்மா பாடிய   தாலாட்டு பாடல்களில் இப்பாடலும் ஒரு மணி மகுடம் . என் இதயம் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்பதுடன் நிறைவு செய்கிறேன்.

அமுதம் தொடரும்.......


https://youtu.be/Lf6joXM_jHQ


                  

Saturday 12 November 2016

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!
கரையான் அறியாத்த சிரிக்கான் அறியாத்த களிமண் ப்ரதிமகளே!
மறக்கு நிங்களீ தேவதாசியே! மறக்கூ மறக்கு!
விரக்தியின் விளிம்பில் நின்று பாடும் பாடல்.

சோகத்தின் உச்சத்தை வாழ்வின் துயரத்தை விவரிக்கவொண்ணா வார்த்தைகளில் அடிபட்ட குயிலின் துக்கத்துடன் நம்மிடம் பகிரும் இசை தேவதையின் குரல்.

'ஆயிரம் ஆயிரம் அந்தபுரங்களில் ஆராதீச்சவள் ஞான்! நிங்கள் ஓரிக்கள் சூடி எறிந்தொரு நிஷாகந்தி ஆயி ஞ்சா ன்.!"

இரக்கமே இரங்க கூடிய சூழலில் இரங்கத் தக்க இந்த பாடலை தன இனிய குரல் மூலம் பாடி நம்மையும் இரங்க விக்கிறார் சுசீலாம்மா.

"கண்ணீரில் முங்கிய துளசி கதிராய் கால்கள் வீணவள் நான்!
கால் கல் வீண வள் ஞ்சான். !"

1967 இல் வெளி வந்த அக்னிபுத்ரி என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை ஷீலாவுக்காக பாடிய இந்த பாடலை கேட்கும் போதே அந்த குரலின் சோகம் நம் இதயத்தை பிழிகிறது.

மிக சிறப்பான இசை , ஆனால் நடிகர் பிரேம் நசீரின் பாடலுக்கு சிறிதும் பொருத்தமில்லாத நடிப்பும், முக பாவங்களும், ஷீலாவின் மிகையில்லாத நடிப்பு எல்லாம் சேர்ந்து உயிர் பெறுவது அம்மாவின் அழகு குரலால்தான் என்பதை எல்லாரும் ஒப்புக்கொண்டேதான் ஆக வேண்டும்.

கால்கள் வீணவள்; கால் கல் வீணவள் என்று சொல்லை பேதப்படுத்தி அதன் பொருளை வேறுபடுத்தி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது கான தேவியின் குரல். 

சோகப் பாடல்களின் உச்சத்தில் நிற்கும் இப்பாடல் மலையாள திரை உலகின் evergreen பாடல்களின் பட்டியலில் உச்ச இடம் பெற்று இருப்பதே பாடலின் வெற்றி பாடகியின் வெற்றி. அப்பாடகி வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அதை ரசிக்கும் பேறு பெற்றதே நமது வெற்றி. 

கண் திறக்காத தெய்வங்கள் நம் காதைதிறந்து பாட்டை கேட்க வைத்ததே நமக்கு கிடைத்த வெற்றி.

அமுதம் தொடரும்

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. "

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. " 

கட்டிலா தொட்டிலா என்ற திரைப்படத்தில் அம்மா பாடிய பாடல். சிவகுமாரும் கல்பனாவும் நடித்துதுள்ளனர். இசை வி. குமார். ஒரு விசித்திரமான நடன அசைவுடன் இந்த பாடலை சுசீலாம்மா பாடும் போது ஒரு மோக மயக்கம், கிறக்கம் கேட்போருக்கு கட்டாயம் ஏற்பட்டே தீரும். அதிலும் அவர் பாடலின் குரலின் ரசிகர் என்றால் கேட்கவே தேவை இல்லை.
" ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்'என தொடங்கி ஒரு ஹம்மிங் இசைப்பார் பாருங்கள். இல்லை இல்லை கேளுங்கள். அப்பப்பா! நமக்கே ஒருவித மயக்கம் அம்மாவிடம் அவர் தேன் குரலிடம் வந்தே தீரும்.
காதல் கொண்ட பெண் தன் நிலையை "வாய் கொஞ்சம் வெளுக்கும் விழி கொஞ்சம் சிவக்கும் நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்' காதலனிடம் கூறுவதை ஒரு 18 வயது பெண்ணின் காதல் குரலில் கன்னி குரலில் அம்மாவாக பல பாடல்களில் நமக்கெல்லாம் தாலாட்டு பாடிய அம்மா பாடும் போது அடடா அந்த இசை பொற் கால தேவதை நம்மை மயங்க வைக்கிறாள்.
காதலன் தோட்ட அந்த ஸ்பரிசம் அவளை என்னமோ செய்கிறது
"நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல் ஓடும் காரணம் நால்விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய் ஆடும் காரணம்" இவ்வரிகளை கேட்டால் நம் நாடி நரம்பில் ஒரு இசை மின்னல் பாய்கிறது.

'ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க எழுதும் மன்னவா எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ முழுதும் சொல்லவா. மடித்தான் மஞ்சம் மலர் மஞ்சம் இதழ் தான் கிண்ணம் மது கிண்ணம் இடைத்தான் மேடை மணிமேடை இன்னும் என்ன சுகம் தேவை பருவங்கள் நமக்காக" 
என நம்மியும் பருவ போதையில் ஆழ்த்தும் அந்த வசீகரம் அவர் குரலில் மட்டுமேயன்றி வேறு யார் குரலிலும் கேட்க முடியாத பொக்கிஷம்.

இந்த பொக்கிஷம் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமது பாக்கியம். அந்த இனிய குரலை புகள்வதே சிலாக்கியம். ஒரு வித மயக்கம் சுசீலாம்மாவின் குரலில் எனக்கும்ம்மம்மம்..

அமுதம் தொடரும்
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

பூவினும் மெல்லிய பூங்கொடி

பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இந்த மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க தினம் வாழ்க
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக.."!

மிக இனிமையும் இளமையும் நிறைந்த அம்மாவின் குரல் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

பூவினும் மெல்லிய இனிய குரலில் அம்மா பாடிய பாடல் இது. கண்ணன் வருவான் திரைப்படத்து பாடல். ஆண் குரலில் TMS உம், பெண் குரலில் அம்மாவும் பாடியது. இசை அமைத்தவர்சங்கர் கணேஷா. ? சரிவர தெரியவில்லை. மிக இளமையான தோற்றத்தில் லட்சுமியும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் காட்சியளிக்கின்றனர்.

பாடலின் இனிமை பாடல் வரிகளில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் குரலும் இசையும் சேர்ந்து மயக்கமூட்டுகிறது.

ஆண் பாடும் பாடலில் உள்ள கருத்தாழம் இதில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் குரல் பாடலை தூக்கி நிறுத்தி மிக அருமையான ஒரு மெல்லிசை பாட்டாக மலர்விக்கிறது. படத்துடநினைந்த கருத்துகள் கொண்ட பாடலோ என்னமோ?
லட்சுமியின் நடிப்பு அம்மாவின் இணைய குரலுக்கு அழகூட்டுகிறது.. நிர்மலாவின் கோணங்கி தனமான சேட்டைகள் படம் வந்த காலத்தில் புதுமையாக இருந்து இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும்அஅம்மாவின் மிக சிறந்த பாடல்களில் இதுவுமொன்று என்பதில் சந்தேகமே இல்லை.

அமுதம் தொடரும்....


https://youtu.be/IblCqG52Dn4

குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே


"குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே குளிச்சு தொழான் வன்ன வார்முகிலே
இள வெயில் காஞ்சு காஞ்சு நடக்கும் நினைக்கிப்போள் 
இள மானினே போலெ செறுப்பம்"

ஜி. தேவராஜனின் இசையில், மாங்கொம்பு கோபாலகிருஷ்ணன் எழுதிய பாடல். 

அம்மா பாடியது. 1976 இல் வெளிவந்த மிஸ்ஸி திரைப்படத்தில் இடம் பெற்றது.

இப்பாடலின் ஆரம்பமே விடியற்காலை நேர பூபாள ராக இசை போலவும், மெதுவாக மொட்டு அவிழும் மலர் போலவும், பனி காலத்து சூடே இல்லாத இதமான சூரியன் போலவும் அம்மாவின் அழகு குரலில் விரிகிறது.

" சந்தன குளிர் காற்று திளகும் நின் சிறகுகள் உள்சாகத் திடுக்கம்!
விண்ணிலே மந்தாகினியோடுழுகும் நின் 
கண்ணிலோர் இந்திர சாப திளக்கம்!"

அப்படியே இந்த வரிகளை அவர் குரலில் கேட்கும் போது, பனி நிறைந்த ஒரு மலை மீது சில்லென்று அமர்ந்து , உள்ளும் புறமும் குளிர்ச்சி பொங்க (பட்டுப்பூச்சியை) இந்திர சாபத்தை, வண்ணங்கள் ஒழுக பார்ப்பது போன்ற ஸ்வர்க்கானுபவம் நம் மனதில் மாயை போல் உருவாகிறது இல்லையா?

"ஆகாசம் வேனலின் திர நீக்கி வர்ஷத்தின் துகில் அணிஞ்சனையும் போள்
யத்ர மேலோஜ்வல ........... ஷோத்ரம் போல் மண்ணில் வீனுடைஞ்சாலோ"
இவ்வரிகளை கேட்கும் போது உள்ளம் எங்கோ பறக்கிறது. சமஸ்க்ருதம் கலந்த மலையாள மொழி அம்மாவின் அழகான உச்சரிப்பில் மேலும் அழகு பெறுவதையும் இனிமை அடைவதையும் எண்ணி புளகாங்கிதம் ஏற்படுகிறது.

என் மனதை கவர்ந்த இப்பாடலின் சுகானுபவத்தை இழக்க விரும்பாமல் நான் இப்பாடலின் காணொளியை காண்பதே இல்லை. 

இரவு நேர இருளில் இப்பாடலை அமைதியான சூழலில் கேட்போருக்கு மட்டுமே பாட்டின் அருமையும், படகின் பெருமையும் இனிமையும் விளங்கும் என்று நினைக்கிறேன். சரிதானே!!

அமுதம் தொடரும்....

கண்ணுக்கு மை அழகு


" கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு"

1951 இல் கன்ன தல்லி திரைப்படத்தில் எந்துக்கு பிலிச்சாவ் ஏந்துக்கு? என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆன அந்த பெண்மணி தென் இந்தியாவையே தன் இசை குடை கீழ் ஆண்டு விட்டு அமைதி காணும் நேரத்தில் இசைப்புயலே நான் என்று வந்த A.R.Rahman இசையில் தன் புதிய முகத்தை புதிய முகம் படத்தில் பாடிய பாடல் இது. 

முதலில் வரும் அந்த ஆலாபனையே நம்மை கிறங்க வைக்கும். 1951 க்கும் 1993 க்குமிடையே சுமார் 40 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகள் திரை உலகில் நிலைத்து நிற்பது ஒரு சாதனை என்றால், தன குரல் இனிமையை தக்க வைத்து கொள்வது பெரும் சாதனை. அதிலும் தன்னை ஓரம் கட்ட எண்ணும் சில இசை அமைப்பாளர்களிடையே தன் இருப்பை தக்க வைத்து புதிதாய் வந்த புயலை, இசை புயலை தன்னை நாடி பாட வைக்க செய்வது பெரும் சாதனை மட்டுமல்ல அரும் சாதனை.

புதிய முகத்தில் பாடிய இந்த பழைய முகம் குரலில் மட்டும் நமக்கு அறிமுகம். இனிமையில் நமக்கு தெரி முகம்.

கணவனுடன் கொஞ்சி விளையாடம் இளம் பெண்ணின் நாணத்தை இதத்தை அப்படியே தன் குரலால் பதிவு செய்கிகிறார் சுசீலா.

"ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு
அன்பான முத்தத்தில் கலை ந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிழை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு"
என அட்சர சுத்தமாக பாடுவது சிலருக்கே வாய்த்த வரம்.

' மழை நின்ற பின்னாலும் இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இறவோடுத்தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நன் அழகு"

கூடல் முடிந்த பின் இயற்கையை மகிழ்வூட்டும் விதமாக கவி வைரமுத்து எழுதிய பாடலை மேலும் மெருகூட்டுகிறார்.

இயற்கை என்றும் மாறாதது
இமயம் என்றும் மாறாதது
அதுபோல் தன் குரல்
இனிமையும் என்றும் மாறாதது
என நமக்கு நிரூபிக்கிறார் சுசீலா.

அவருடைய இனிய பல பாடல்களில் இதுவும் சிறந்ததுஎன்றால் மறுக்கவா போகிறீர்கள்?

அமுதம் தொடரும்......


https://youtu.be/gzjIZdTThvs

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே...!
எத்தனை பேர் தாலாட்டு பாடினாலும் தென்னிந்திய குழந்தைகள் அனைவருக்கும் ஒரு குரலின் தாலாட்டு மட்டும்தான் மிகப்பிடிக்கும். பெரும்பாலோர் அந்த குரலின் தாலாட்டைக் கேட்டு வளர்ந்தவர்களேதான். அக்குரல் யாருடையதென்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

80 களின் இறுதியில் வெளிவந்த நினைவுச்சின்னம் திரைப்படத்தில் நடிகை ராதிகாவுக்காக பாடிய பாடல். 

குழந்தையை தாலாட்டும்போது மித உயர்வாக பாடும் மரபையொட்டிய பாடல். ஆண்டாள் பாடலின் முதல் வரியை இதில் பயன் படுத்தி இருப்பார் பாடலாசிரியர்.

ஏலே இளங்கிளியே என்னாசை 
பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீஞ்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே"
என்று அம்மா பாடும்போது கிராமத்து பாடல் போன்ற உச்சரிப்பில் நம்மை மகிழ் வைக்கிறார்.

கிராமத்து தாய் போன்ற வடிவில் ராதிகா நடிக்கும் போது அவர் வடிவிக்கேற்ப தன குரலையும் உச்சரிப்பையும் மாற்ற முடிவது அவரால் மட்டுமே முடியும்.

"குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேட்காதவர் " என்ற வள்ளுவரின் வரிகளை சற்றே மாற்றி,


"குழலோடும் யாழ் ஓடும் இசை கேட்குகும் பொழுது மழலை உன் குரல் போல இசையாவதேது. யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை. அன்பிலே அன்பை இணைத்து .........'
இணைத்து தன் குழந்தை தெய்வத்தால் வழங்கப்பட்ட வரம் என நினைக்கும் தாய் மனதை கவி எழுத அதை தன் குரலால் பெருமிதம் பொங்க பாடி நம்மையும் மகிழ்விக்கிறார் சுசீலாம்மா.

"மலை மீது ஓடி வரும் நதி, அலை வீசும் கடல்" என்றெல்லாம் தன குழந்தையினை புகழும் தாய் மனம் தன குழந்தையின் மீது கண் பட்டு விடக்கூடாது என " மூடடி வாசற் கதவை கண்கள்தான் பட்டுவிடுமே பாடடி பேச
பாசக் கவிதை நெஞ்சம் தான் கேட்டு விடுமே" எனக்கூறி தன் தாய் பாசத்தைவெளியிடும் பாடல், மிக அழகுற அம்மாவின் சற்றே கனத்த குரலில் வெளி வருகிறது.

90 களின் தொடக்கத்தில் வந்த இப்பாடல் மிகப்பெரிய அளவில் புகழப்ப டவில்லை என்றாலும் என் மனதை கவ்விய தாலாட்டு பாடல்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை

அமுதம் தொடரும்.......

https://youtu.be/iAbOJ1wF5sY

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்
https://youtu.be/yhyPzy2_q9M

'அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில்
அர்ச்சனா புஷ்ப மால்யமாய்
நித்யவும் க்ருஷ்ண பூஜ செய்யுன்ன பக்த லோலயாய் ராதயாய்!"

க்ருஷ்ண பக்தர்கள் மட்டுமல்ல. அஷ்ட மங்களங்களும் வேண்டுவோர் யாராயிருந்தாலும் கேட்க வேண்டிய கிருஷ்ண கானம்.

செந்நாய வளர்த்திய குட்டி படத்தில்
, மாங்கொம்பு கோபால கிருஷ்ணன் இயற்றி, அர்ஜுனன் இசை அமைத்த பாடலிது.

ஆரம்பமே அமர்க்களமாக கணீர் என்ற தொனியில் அம்மா ஆரம்பிக்கும்போது அதில் நாமும் ஒன்றுபடுகிறோம். தினமும் க்ருஷ்ண பூஜை செய்ய விரும்பும் ராதயாக மாறிவிடுகிறோம். கிருஷ்ண பிரேமிகளாய் நம்மை மற்றும் சக்தி அந்த இனிய குரலுக்கு இருக்கிறது போலும். பல கிருஷ்ணன் பாடல்களை பாடிய குரல் அல்லவா!?!

"வஸ்ர மேக விரலி லாகாசம்
வஜ்ர மோதிரம் சார்த்தும்போல்
எண்டே மௌனமனோரதத்திலே
மஞ்சுள மயில்பீலிகள்
நின் கிரீடத்தில் சூடுவான் இனி எந்து தாமசம்? கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா..."

இவ்வரிகள் நம் காதுகளில் ஒலிக்கும் பொது நம் கண்முன்னே கிரீடத்தில் மயில் பீலி அசைந்தாட , ஆழிலாயின் மீது படுத்து தன கால் விரலையே சுவைக்கும் குழந்தை கண்ணன் ப்ரத்யட்சமாய் கட்சி தருவது எப்படி? இசையலா? பாட்டாலா? பாடியவராலா? இவை அனைத்தும் சேர்ந்தா?

"இந்திரநீல தடாகமாய் மாறும் ஈ மிழிகள் நீ கண்டுவோ
மாரிலே குளூர் சந்தன துளி மான்யத நீ அறிஞ்சுவோ
சுப்ரசாதங்கள் நேடு வான் எண்டே கிருஷ்ண நாதனே
கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா!"

அழகிய கண்ணனின் நீல விலிகளையும், அதை காண்போரின் மணக்க குளிர்ச்சியையும், தன் குரலால், அதுவும் கண்ணன் கையில் உள்ள புல்லங்குழலாய் வெளிப்படுத்தும் அம்மாவின் குரல் ஜாலம் நம்மை வசிய படுத்தி கிருஷ்ணனிடம் ஈர்க்கிறது. 

எப்படிப்பட்ட பாட்டாடாயிருப்பினும் அது சென்று சேரும் வாகனம் பாடுபவரின் குரலே. அம்மாவின் தங்க ரத்த குரல் எனும் வாகனம் ஏறி வரும் இப்பட்டு கிருஷ்ண கானங்களில் மிக சிறந்த ஒன்று என்பதில் எனக்கு ஐயமில்லை. உங்களுக்கும் அப்படித்தானே!

அமுதம் தொடரும்.......

டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ! லவ் யூ!! லவ் யூ

" டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ  லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ  லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
என்னை விட்டு போகாதே மன்னன் உன்னை என் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்  
ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ!"

            ப்ரியா திரைப்படத்தில் இளையராஜா இசையில் சுசீலா அவர்கள் பாடியது.  முதன் முதலில் தமிழ் திரை உலகில்  டிஜிட்டல் முறையில் ஒலிப்பதிவு  செய்யப்பட்ட படம்.

          அழகான ஸ்ரீதேவி, அருமையான வண்ணப்படம், பாடலின் ஆரம்பத்தில் அசத்தும் இசை, என ஒவ்வொன்றும் மிக சிறந்த முறையில் அமைந்த பாடல்.  நீச்சல் உடையில் ஸ்ரீதேவி வரும்போது அம்மாவின் குரலில் ஆனந்தம் பறக்கும், அரங்கில் விசில் பறக்கும்.  முதல் சரணத்தில் ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ  என்று அவர்  இழுக்கும் போது  ஒரு வெஸ்டர்ன் பாடகியை போல மிக அருமையாக ஈசாய்ப்பாரே! அப்பப்பாப்பா!  இனிமை இனிமை இனிமை அள்ளும் .  குரலோ துள்ளும் .


 " யாரும் சொல்லாமல் நானே ஆசை  என்றால்  என்ன வேகம் என்றுகண்டேன் 
           மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா ஆசை கொள்ள ஓடிவா 
               கனி தரும் கோடி இதை அணைத்திட பூஞ்சோலை வா 
ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ!"


                ஐயோ ஐயோ கொள்ளை இனிமை நம் உள்ளத்தை  கொள்ளை கொள்ளும் .  மிக அதிகமாக வர்ணிக்கிறேன் என்று இதை படிப்பவர் எண்ணலாம் .    "இசை உலகின் இனிய பு துமை ஆன வாசலில்  அந்த வடுகுப் பெண்  நின்று கொண்டு இருந்தார் "  என்று திரை இசை அலைகள் என்ற  நூலில் எழுத்தாளர் வாமனன்  அவர்கள் வர்ணிப்பதை படித்த பின் இந்த  பெண்ணை வடுகுப்பெண் என்று எண்ண  தோன்றும்.

           இந்த திரை படத்துக்கு  சில ஆண்டுகட்கு முன் ஊட்டி வரை உறவு என்ற படத்தில் "பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓஒ ஓஒ ஓஒ "என்று இசைப்பாரே அதே இனிமை 10 ஆண்டுகளுக்கு பின்னும் தொடர்கதையாகி உள்ளது என்றால் மிகையில்லை .

             இசைக்குயிலின் இனிய ஆலாபனையில் இப்பாடல் ஒரு மேலே கல் என்றால் மிகையில்லை .

 "காதல் இல்லாத  வாழ்வில் என்ன இன்பம் 
சொல்ல என்ன வெட்கம் அங்கே... ... " 
இவ்வரிகளையே நாம் இவ்வாறு மாற்றலாம்.  அம்மாவின்  குரல் கேட்கும் போது என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் என்று.நான் சொல்வதில் தவறுகள் இல்லையே. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இப்பாடலை நீங்களும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்வதில் 
சுரப்பது ஆனந்தம்! 
  பிறப்பது பேரின்பம்!!

 இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இதே பாடலை கன்னட மொழியில் வேறு ஒருவர் பாட கேட்கும் போதுதான் இசை அமைப்பாளர்கள் ஏன்  இப்படி அம்மாவை விட்டு விட்டு வேறொருவரை பாட வைத்து பாடத்தையே சொதப்புகிறார்கள் என்ற எண்ணம் நம் நாணத்தில் நிழலாடுவதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
அமுதம் தொடரும்....


Subscribe & Stay connected: http://www.youtube.com/subscription_c...
add_user=lehrenTamil

Thursday 3 November 2016

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு சீதே

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு  சீதே 
மரளி பந்தெளு  சீதே!  
ஸார்வ பௌமா ஸ்ரீ ரமா சந்திரன  ப்ரேமதே ஆக்ரே ஒண்தே
 தா செந்தெளு ஆ மாதே !

சரபஞ்சரா  திரைப்படத்தில் நடிகை கல்பனா நடிப்பில்  கொலு நிகழ்ச்சி ஒன்றில் பாடுவது போல அமைந்த இப்பாடல் அம்மாவின் இனிய குரலில் ஒலிக்கும்.

               இராமாயணத்தில் சீதை மீண்டும் காட்டுக்கு போன கதை மொத்தமும் அவள் பட்ட வேதனைகளும். லவ குசர்களின் ஜனனமும் அத்தனையும் அம்மாவின் குரலில் வேதனையோடு வெளிப்படும் போது அதற்கு கட்டுப் படாதவர்  எவரும் இருக்க முடியாது.

    " அக்னி பரீக்ஷய சதவ பரீக்ஷய புரி யாதளு  சீதே
           அக்னியே ததித்ததே போஷித்தீரா சீதே புனீ தே! சீதே புனீ தே!!
             அல்பாஷாநத கல்பிதே மாடுதே அழுகித்தே ஸ்ரீ ராமா 
             சீதே  கலூஷிதே சீதே திவேஷிதே   "  

என்று உயிரை கொடுத்து  பாடும் பொது உருகாத மனமே இருக்க முடியாது. சீதையின் துயரை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. 

                      அந்த பெண்  எப்படியெல்லாம் கர்பிணியாகி  காட்டில் கஷ்டப்பட்டாளோ ? என்ற எண்ணம்  நம்  மனதில் கட்டாயம் தோன்றியே  தீரும். அக்னி பரீட்சையின்  விளைவு ஒரு பெண் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது  என்பதை அம்மாவின் குரல் மூலமே அறிய முடிகிறது.

"பூர்ண கர்ப்பிணிய புண்ய ரூபிணிய கண்டனு வால் மீகி 
லோக மாதகே சோக கார கவே நிர்த்தயி ராமா !நிர்த்தயி ராமா!!
பர்ண குடீரீத லவ குசா ஜனநா சீதைக்கு சாந்தி நிகேதனா!"

               என்று வால்மீகியிடம் சீதை அடைக்கலம் புகுந்ததையும், லவ குசனின்  பிறப்பே அவளுக்கு ஓர் ஆறுதல் நிலையயை அளிப்பது  போலிருந்ததையும் மிக அருமையான கணீர் என்ற குரலில் கன்னட மொழியை துளி பிழை இல்லாமல் பட முடிந்தது அம்மாவால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.  ஏன்  எல்லாருடைய நம்பிக்கையும் அதுவே .

         இராமாயண  கதையின் பின் பாதியை மிக அழகாக எழுதிய கவியின் நினைவோ இசை அமைப்பாளரின் நினைவோ  அந்த பாடலின் நடிகை கல்பனா நினைவோ நமக்கு வருவது இல்லை.

     நமது நினைவில் கனவில் மனதில் கற்பனையில் கலந்து இருப்பவர் ஒருவர் மட்டுமே  அவர்தான்  நமது எவெர்க்ரீன் சுசீலா அம்மா ..

அமுதம் தொடரும்.. .. ..


Tuesday 1 November 2016

மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி!

"மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ! 
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!! 
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி!!"

இந்த வரிகளை என்னால் மறக்கவே முடியாது.   என்னால் மட்டுமல்ல. யாராலும்தான்.இந்த பாடல் அடிகள் சுசீலா அம்மாவுக்கென்றே அமைந்த வரிகள் எனலாம்.                 

        இன்னமும் இளமையோடும், குழலையும் தோற்க வைக்கும் குரல் இனிமையோடும் பாடிக்கொண்டிருக்கும் பைந்தமிழ் தேவதையின் குரல் நம்மை வசீகரிக்கும் பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று. 
         
                 அவளுக்கென்று ஒரு மனம் என்ற படத்தில் பாரதிக்கு அம்மா பாடிய பாடல் இது.  இப்பாடலின் மூலம்தான் யாரோ ஒருவரால் அம்மா அழுததாகவும், அதனால்தான் அவர் பின்னாளில் அவர் தன் இசை அமைப்பில் அவரை பாட விடாமல் செய்ததாகவும் படித்திருக்கிறேன்.  ஆனால் அதனால் நஷ்டம் அவருக்கே தவிர நமக்கல்ல .

               பெரும்பாலும் மேடையில் இந்தப் பாடலை பாடாத அம்மா ஒரு முறை இசைத் தொழிலாளர்கள் சங்கம் கூடிய மேடைமேடையில் இந்த பாடலை பாடினார்.  அதை அவரே தன இனிய குரலால் அந்த மேடையில் பதிவும் செய்தார் .

                   இந்தப் பாடலின் மயக்கும் இசை, சிறந்த படப்பிடிப்பு, பாரதியின் நடிப்பு இவையெல்லாம் வண்ணக்காவியமாய்  நம் நினைவில் நீங்க இடம் பிடித்துள்ளன.

                 "நீரில் மிதந்தது இளம் மேனி நான் நாடு விட்ட தாமரை அன்றோ!"  என்ற வரிகளில் ஏற்படம் சுகானுபவம் மறக்கவே முடியாது.  பாரதியின் குரலை போல் தன் குரலை மாற்றிப் பாட  எப்படித்தான் அம்மாவால் முடிந்ததோ!  ஆச்சரியம்தான்.  !!!

          "கன்னம்  சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையோ " என்று  தன காதலை மறைமுகமாக ததன்  காதலனுக்கு வெளிப்படுத்தும்  இடம்  மெய் மறக்க வைக்க கூடியது.

                இன்னும் இந்த பாடலை பற்றிய குறிப்புகளை  சொல்லிக்கொண்டே போகலாம்.  எனக்கு பிடித்த இந்த பாடல் பற்றிய விவரங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  மெய் சிலிர்க்க கூடிய ஒரு அனுபவம் இது.

                                                                                            அமுதம் தொடரும்.. .. ..