" லாலி லாலி லாலி லாலி
வட பத்ர சாயிகி வரஹால லாலி !
ராஜீவ நேத்ருணிக்கி ரத்தநால லாலி!
ராஜீவ நேத்ருணிக்கி ரத்தநால லாலி!
முறி பால கிரிஷ்ணுடுகி முத்தியால லாலி!
ஜகமேலு ஸ்வாமிக்கி பகடால லாலி!
ஜகமேலு ஸ்வாமிக்கி பகடால லாலி!
1986 இல் வெளி வந்த ஸ்வாதி முத்யம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் , இசையரசி பாடிய பாடல். நடித்தவர் ராதிகா . குரல் இசைக்கேன் பிறந்த அம்மாவின் மிக சிறப்பாந பாடல்களில் ஒன்று. மேலும் அம்மாவின் பாடல்களின் ஸ்பெஷாலிட்டி என்றாலே தாய்மை ததும்பும் அவர் இனிய குரல். அதை மீண்டும் நிரூபித்த பாடல் இது.
குழந்தை கிருஷ்ணனாக தன் குழந்தையை பாவித்து தாலாட்டி பாடும் தாலாட்டு பாடல் இது. அம்மாவின் பாடல்களை சும்மா கேட்டாலே ஏற்படும் மகிழ்வு தாலாட்டு பாடல்களால் இன்னும் இரட்டிப்பு ஆகும் என்பது
நம்மனைவருக்கும் தெரியும் அல்லவா?! இந்த பாடலும் அதே ரகத்தை சேர்ந்தது.
ஆலிலை மேல் துயில் கொண்ட கண்ணனுக்கு லாலி, தாமரைக்காண்ணானுக்கு லாலி , பாலக்ரிஷ்ணனுக்கு லாலி, என்றெல்லம் தன் குழந்தையை பாராட்டும் தயாகாவே மாறி பாடுகிறார் அம்மா. மேலும் யாரெல்லாம் தன் பிள்ளையை பாராட்டுகிறார்கள் எண்டு அவர் போடும் பட்டியலை கேளுங்கள்.
" கல்யாண ராமுடுக்கி கௌசல்ய லாலி! யதுவம்ச விபுனி கி யசோத லாலி !!
கரிராஜ முகுனிகி கிரி த னய லாலி! பரமாத்மா பவுரினிக்கி பரமாத்மா லாலி!!"
இவ்வாறெல்லாம் புகழ்ந்து விட்டு,
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ என ஒரு ஆராரிரோ இசைப்பார் பாருங்கள் தூங்காத குழந்தை கூட தூங்கி விடும் .
"அலமேலு பதிக்கி அன்னமய்ய லாலி !
கோதண்ட ராமுடுக்கி கோபைய்ய லாலி!!
ஷ்யாமளங்குனிக்கி ஷ்யாமய்ய ய்ய லாலி !
யாதவ விபு ணிக்கி தியாகய்ய லாலி !!"
என்று தாலாட்டின் சிகரமாக அமைந்த இந்த பாடல் தெலுகு திரையுலகில் மறைக்க , மறக்க முடியாத பாடல்.
இதன் தமிழ் பாதிப்பும் மிக அழகாக வைரமுத்துவால் இயற்றப்பட்டு , அம்மாவால் பாடப்பட்டு புகழ் பெற்றது என்றாலும், மூல மொழியில் கேட்கும் சுகமே தனி என்பதை அனைவரும் ஒப்பு கொள்வார்கள். ஏனெனில் அது சுந்தர தெலுங்கு அல்லவா?!?
எது எப்படி இருப்பினும் அம்மா பாடிய தாலாட்டு பாடல்களில் இப்பாடலும் ஒரு மணி மகுடம் . என் இதயம் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்பதுடன் நிறைவு செய்கிறேன்.
அமுதம் தொடரும்.......
https://youtu.be/Lf6joXM_jHQ
எது எப்படி இருப்பினும் அம்மா பாடிய தாலாட்டு பாடல்களில் இப்பாடலும் ஒரு மணி மகுடம் . என் இதயம் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்பதுடன் நிறைவு செய்கிறேன்.
அமுதம் தொடரும்.......
https://youtu.be/Lf6joXM_jHQ
No comments:
Post a Comment