Wednesday 16 November 2016

தொடுவானம் ரொம்ப தூரம் தொட்டு பார்க்க ஆசை உனக்கு

" தொடுவானம் ரொம்ப தூரம்
தொட்டு பார்க்க ஆசை உனக்கு கையோடு சேருமோ
இல்லை கனவாக மாறுமோ!"

அவள் பாரதி கண்ட புதுமைப் பெண். கொடுமை கண்டால் பொங்கி எழுவாள். அதனால் சிறையில் 7 ஆண்டு அடைபட்டு பரோலில் வெளி வந்த பின் அவளை சமூகம் குடும்பம் நடத்தும் முறையை எண்ணி பாடும் பாடல்.

நியாய தராசு படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சுசீலா அவர்கள் பாடிய பாடல். நடித்தவர் ராதா.

சிறந்த படமாகவும் சிறப்பான பாடலாகவும் இருந்தாலும் தோல்விப் படங்களில் இருக்கும் அருமையான பாடல்களும் கவனம் பெறாமல் போகும் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த உதாரணம்.

"சுடுகின்ற கோடையில் வெகு தூரம் நான் நடந்தேன்
சுகமான மேகமே மழை நீரை நீ கொடுத்தாய்
தண்ணீர் எந்தன் கையில் வந்தும் தாகம் தீர்க்க யோகம் இல்லை
தண்ணீர் தாகம் இல்லை கண்ணீர் சாபமா"

வாழ்வின் சோகம்சொந்தங்கள் சந்தர்ப்பவாதம் சமூகத்தின் புறக்கணிப்பு இவை அனைத்தையும் கலந்து பாடும் நாயகியின் உணர்ச்சிகளை தன் குரலில் அச்சு அசல் பிசகாமல் ப்ரதிபலிப்பார் அம்மா.


"பொய்யான வேடங்கள்
பல போலி பாத்திரங்கள்.
புரியாத மேடையில் பல பொம்மை நாடகங்கள்.
கானல்நீரில் தூண்டில் போட்டு
கனவில் பாடும் காதல் பாட்டு
வாழ்வே சாபமா
பெண்ணின் அன்பே பாவமா'

பாலைவனத்தில் காணும் சோலைவனம் போல் கிடைக்கும் ஒரு நட்பும் நிலைக்குமோ என்ற ஏக்கமும், சொந்தங்களின் நடிப்பால் ஏற்படும் தாக்கமும் சோகம் இழை ஓட அருமையாக பாடி இருப்பார் அம்மா.

தன்னை புரிந்து கொள்வோர் யருமில்லையோ என்ற துயரம்தான் குரலில் தொனிக்க அம்மா பாடும் இப்பாடஎன்னை மட்டுமல்ல அம்மாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்றால் இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அமுதம் தொடரும்.......


https://youtu.be/BJWC5c0wvA4
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

No comments:

Post a Comment