Saturday 4 February 2017

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி சரிதமு

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி  திவ்ய சரிதமு வினுடே ஜநூலாரா பாரத   திருப்பதி அணி ஒக்க திவ்ய க்ஷேத்திரமு கலது 
பக்துலா பாலிடி ஷாந்திகாந்திவை காமதேனு வேலயு 
நிரூபமானமு பரமாத்மபுதம்மு திருமால பதி மகாத்யமு  

               இதேக்கடி நியாயம் என்ற படத்தில் அம்மா பாடிய யில்லை இல்லை  அம்மா பொழிந்த அமுதம் என்றே இந்த பாடலை சொல்லலாம்.  கதா  கால க்ஷேப வடிவில் அமைந்த இந்த பாடல் மிக அற்புதமானது என்றே நான் கருதுகின்றேன் .  என் மனதுக்கு பிடித்த பாடல்களில் இதற்கொரு தனி இடம் உண்டு.

            திருப்பதி நகரத்தில் கடன் பட்ட ஒருவனை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி காப்பாற்றியதை மிக அழகான அற்புதமான குரலால் பாடி நம்மை மகிழவித்திருப்பார்.

                   இடையிடையே கதை கூறுவதும் அதனை தொடர்ந்து பாடல் வருவதும் போல அமைந்த அற்புத வடிவம் இது என்றால் மிகையில்லை. கத்யம் போல  தோற்றமளிக்கும் பாடல் எனவும் கூறலாம்.

நீதி மன்றத்தில்.  ஏமாற்றப்பட்ட ஒருவனுக்காக நீதிபதி கூறுவது  சிரிப்பை வரவழைக்கும்.
எமாய்யா ஒ வெற்றி சூறையா தெளிவிலேணி பிட்டி புல்லயா 
அப்பு தீசாவ்னி முட்டு குண்டாவு 
தாக்கலா       இம்மண்டே சூப்பமண்டாவு 
உன்ன சாக்ஷி ஒக்கடு  போ யாடான்டாவு 
செப்பவய்யா  ஏமி செயமண்டாவு 

என நக்கலாக கேட்பார் பாருங்கள் இல்லையில்லை கேளுங்கள் அசத்திடுவார்

ஓ  வெங்கடேஸ்வரா ஆபத்தை முக்குல வாடா 
அனாதை ரக்ஷகா காபாடவா நண்ணு காப்பாடாவா .....
என்றெல்ல்லாம் பாடா தென் மலை நம் காதுககளில் பொழியும் அந்த தருணங்கள் நம்மை எங்கேயோ  திருப்பதிக்கே கொண்டு செல்லும் என்பது மிகையில்லை .

கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.  ஒரு முழுமையான கதை ப்பாடலை கேட்ட திருப்தி நமக்கு உண்டாகும். 


அமுதம் தொடரும்.....
.

https://www.youtube.com/watch?v=plJJt_BEUPQ

Thursday 2 February 2017

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன் 
அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன் 
 மதுவை நீ ஊற்றிக்கொடு   மயங்குகிறேன் மாறுகிறேன் 

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்  அம்மாவின்  விளைந்த அற்புதப் பாடல். இந்த பாடலை  பலர்  அம்மாவின் அடிமை ஆகிவிட்டனர்  என்றாலும்  இந்த  கெட்டவர்கள் அது எந்த தலை முறையாக இருந்தாலும் அடிமை ஆகி விடவே வேண்டும் என்பது எனது முடிவு.

கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒரு குடும்பப்பெண் மது அருந்தி விட்டு பாடுவது போலெ  அமைந்த இந்த பாடல் அம்மாவின்  எங்கேயோ எட்டாத உயரத்துக்கு சென்று விட்டது.
மது எடுத்தேன் உன் மலரடி நனைத்தேன் பாத பூஜைகள் முடித்தேன் 
புது மயக்கம் இந்த மது மயக்கம் பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்  
என்று பாடுகிற  போது அம்மாவின் குரலில் இணையும் வேதனை, வெறுப்பு, கேலி, பரிதாபம் எல்லாருடைய உள்ளத்தையும்  உருக்கும்.   அந்த கணவனை  எல்லார் மனமும் வெறுக்கும்.

தன் வாழ்வு தன்  கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே என்னும் வேதனையம் விரக்தியும் தன குரலில் பிரதி பலிக்க இந்த வரிகளை பாடுவார்,

சபை தனிலே நின்றாடிடும் பெண்மை சாவியை ஆடிடும் பொம்மை 
பால் மயக்கம் சிறு பள்ளியிலே நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே கல் மயக்கம் நீ கொடுக்கையில் கண் மயங்கும் இந்தப்பெண் மயங்கும் 


பாடலின் இடையில் லாலாலாலா என்று  ஒரு ஹம்மிங் கொடுப்பார் பாருங்கள்.  என்ன  ஒரு உல்லாசம். இறுதியில் வரும் மயக்கம் அப்பப்பா . அருமையான பாடல்  அருமையான
நடிப்பு. வெண்ணிற ஆடை நிர்மலாவின் சிறந்த நடனம் எல்லாம் சேர்ந்து ஒரு பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.

https://www.youtube.com/watch?v=XvbnNnkjGnQ

அமுதம் தொடரும்......

Saturday 21 January 2017

அரும்பரும்பா சாரம் தொடுத்த அழகு மலர் மாலை இது !



அரும்பரும்பா சாரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ 
தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனி இது தாலேலோ 
மகளே நீ மயங்காதே மணிவிளக்கே கலங்காதே 
பூச்சூடும் புது பூந்தேரே  பாலாறே!

 1992 ஆம்  ஆண்டு வெளிவந்த சின்னத்தாயி திரைப்படத்தில் இளையராஜா இசையில் அம்மா பாடிய பாடல். நடிகை சபீதா ஆனந்த் என நினைக்கிறேன்.

                 அருமையான பாடல். ஆனால் அம்மா ரசிகர்கள் தவிர மற்றவர்களிடம் ரீச் ஆனதா? என்று தெரியவில்லை. 

              ஆடவன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு அவன் மூலம் ஒரு பெண் குழந்தையையும்  பெற்று சமுதாயத்தில் வேசி நிலைக்கு தள்ளப்பட்டு வேறு எவனோ ஒருவனுக்கு வைப்பாட்டியாக வாழும் ஒரு பெண்ணின் அவலக்குரல் அம்மாவின் இனிய காத்ரத்தின் மூலம் துயரத்துடன் வழிகிறது.  


                    தான்   பட்ட துயரங்களை வேதனையை துயரத்தை தன் மகளும் அனுபவிக்க கூடாது என்பதை மிக அருமையான கதை போல தாலாட்டு போல கூறுவதை  அம்மா  அனுபவித்து பாடியிருப்பார்.   ஆனாலும் பின்னாளில் அந்த தாயின் கதையே அத்திரைப்படத்தில் அரங்கேறுவது வேறு விஷயம்.

        அந்த கஷ்டத்தை
ஒருவன் இசையினிலே ------ 
திசைமாறி நான் விழுந்தேனே 
மனித குணங்களையும்  
மாறும் இனங்களையும் அறியாமல் நான் தவித்தேனே 
நஞ்சை விட கொடிது ஆடவரின் மனது 
அன்னை  அதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு 
ஏமாந்தாள்  தாயும் 
என்னை போல நீயும் 
ஆகி விடாதே பின்பு 
அவதி படாதே 
என்று பாடும் போது அனுபவ மிக்க பாடகி அனுபவமிக்க இசையில் வாழ்க்கையை  அந்த  அனுபவத்தை வெளிப்படுத்துவது என்பது பிற பாடகிகளால் கொணர முடியாது என்பதற்கு இந்த பாடலே ஒரு உதாரணம்,

                அனுபவம், இனிமை, இசை, வார்த்தை , அம்மா  இவை அனைத்தையும்  ஒன்று சேர்த்து பாடும் அம்மாவின் குரல் இந்த பாடலை வேறு தளங்களுக்கு கொண்டு செல்கிறது,    


                இரவு நேரங்களில் ஊர் உறங்கும் சமயங்களில் ஏதேனும் தனி இடத்தில் தனிமையில் இந்த பாடலை கேட்கும் அனைவரும் தங்கள்  வாழும் உலகத்தை விட்டு வேறு உலகுக்கு செல்வது நிச்சயம்.  அதை சாத்திய  படுத்திடுவது அம்மாவின் குரல் எனும் சத்தியம். ஒப்புக்கொள்கிறீர்கள்தானே!?! 

https://www.youtube.com/watch?v=d-Yaul5Dnn8

அமுதம் தொடரும்....

Thursday 19 January 2017

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை

சொந்தமில்லை 
பந்தமில்லை வாடுது  ஒரு பறவை
அது தேடுது தன்  உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில் 
அது வாழுது  தன் நிழலில்  
அக்கக்கோ எனும் கீதம் 
அதுதானே அதன் வேதம் 

               இளையராஜாவின் முதல் திரைப்படமாக  வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தில் சுசீலா பாடிய இனிய  கீதம் .  சோகத்தை பிழிந்து  நெஞ்சத்தை கிழித்து கண்ணீரை வரவழைக்கும் ஒரு இனிய பாடல் .  அக்கக்கோ  எனும் வரியில் வழியும் சோகத்தினை  அவரை தவிர வேறு யாராலுமே பாட இயலாது.

           வாழ்வில் சோகத்தை தவிர வேறு எதையும் காணாத ஒரு பெண், அடைய நினைத்த சிறு மகிழ்வும் வேறு ஒருத்திக்கு  விட்டுக்கொடுக்கப்பட வேண்டிய சூழலை தன்  இனிய குரலால் ப்ரதிபலிக்கிறார் அம்மா .

           கோவிலுண்டு தீபமுண்டு 
தெய்வமுண்டு மலர்களுண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே.

ஓடம் உண்டு நதியும் உண்டு 
நதியினிலே வெள்ளம் உண்டு 
அக்கரைதான் அருகில் வரவில்லையே 
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே !
                                 அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!

என்று  இழைக்கும் போது கரையாத மனமும் கரையும்.  கனியாத கல்லும் கசியும்,

             வாழ்வில் துயரமே நிலையாய் துயரமே வாழ்வாய் வாழ்ந்த அவள் தான் எதற்கும் பயன் படாமல் போனதை எண்ணியும், தன் வாழ்வு துன்பக்கடலில் வீழ்ந்ததை எண்ணியும் பாடுகிறாள் இப்படி .

பூவென்றால் தேனை வைத்து 
பழத்துக்குள்ளே சாறை  வைத்து 
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே 

பாழும் அந்த குருவி என்ன 
பாவங்களே செய்ததென்று  
பரிசாக கண்ணீரை தந்தானே 
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே 
                           அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!



பாழும் அந்த குருவி என்ற வரியில் பாழும்  என்ற சொல்லில்  அம்மா காட்டும் பாவம் நம்மை வேறு உலகத்துக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தது .

இனி தன்னால் எதுவுமில்லை தனக்கும் எதுவுமில்லை என்னும் கழிவிரக்கம் ததும்பும் இப்பாடலை தன்  தேன்  குரலால்  பாடுகிறார் அம்மா. இந்த பாட்டை சில திரை அரங்குகளில் தடை செய்ததாகவும் பின் மீண்டும் இணைத்ததாகவும் கேள்வி பட்டு இருக்கிறேன்.  என்ன இருந்தாலும் அம்மாவின் பாடல்களில் இது ஒரு வஜ்ரம் என்றால் அது மிகை இல்லை.  மணிமகுடம் சூட்டிய ஒரு பாடல் என்றாலும் மிகை இல்லை.  என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இது உங்கள் பார்வைக்கு.


அமுதம் தொடரும்.....


































யக்ஷியம்பலம் அடைச்சு

                    கந்தர்வ க்ஷேத்ரம்  எனும் மலையாள படத்தில்  அம்மா ஒரு முதியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் அற்புதமாக குரல் மாற்றி பாடியுள்ள  ஒரு அற்புதப்பாடல் .  

                    யக்ஷி அம்பலம் அடைச்சு
அன்னு துர்காஷ்டமியாயிருன்னு

ஓர் அழகிய குடும்பம் . ஒரு சிறுமி, அவளின் பாட்டி, தாத்தா. மிக அழகிய அந்த சிறுமி ஒரு நிலவிளக்கை கொண்டு வந்து வைத்தவுடன், அவளது பாட்டி யக்ஷியை நினைத்து பயம் தெளியும் வண்ணம் பாடும் பாடல்.

ஒரு முதியவளுக்கும், ஓர் இளம் பெண்ணுக்கும் ஒரே ஒரு பெண்மணி குரல் மாற்றி பாடும் போது ஏற்படும் வேறுபாடு சுசீலாம்மாவால் மட்டுமே கட்ட முடியும். அதை இப்பாடலில் நிரூபித்துள்ளார் அம்மா.

காட்டில் கரும் பன தலைமுடி சிக்கும் காட்டில்... என்னும் போது காற்றின் வேகம் நம் மனதில் உண்டாகிறது.

அந்த சிறுமி நடிகை யார் என்று எனக்கு தெரியவில்லை. மிகஅழகான நடிப்பு. பயம், மகிழ்வு, நடுக்கம் என எல்லா வகையான அபிநயங்களையும் வெளிப்படுத்துகிறாள். I

ஷங்கனி விளக்குமாய் தனியே போகும் சாந்திக்காரண்டே மும்பில் முருக்கான் பொதியில் சுண்ணாம்பு சோதி....நானும் நடிச்சிருன்னு.. என்று மோகினி கதையினை, பேய்கள் சுண்ணாம்பு கேட்கும் என்ற பழைய நம்பிக்கை உடைய ஒரு பாடலை பாடும் போது ஒரு உத்தியவளுக்குரிய குரல் ஒரு இளை யவளிடம் (1972) வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம்.

கூடவே ஒரு முதியவரின் முறுகான் அதாவது வெற்றிலை பாக்கு போடும் கோணங்கி சேட்டைகள் பாட்டை உயர்த்துகின்றன.

மோஹிணியின் அழகை கூட நாபி சுழியின் தாழத்துவச்சவள் நேரிய புடைவை உடுத்தியுருன்னு என் புகழ்ந்திசைக்கிறாள்.

காட்டில் புள்ளுகள் சிறகடிச்சுணரும் காட்டில்... முதியவரின் பாடல் பகுதி நிறைவடைய சிறுமி வளர்ந்தவளாக மாறி,


முத்தஷ்ஷி கதையில் யக்ஷியை நின்னவள் மானத்தில் பறன்னுயர்ன்னு
யக்ஷி பனையுடே சொட்டில் அடுத்த நாள் எல்லும் முடியும் கிடன் நிறுன்னு.. என்று சாரதா பாடும் போது முதிய குரல் மாறி இளம் பெண்ணின் துள்ளல் துடிப்பும் மதுரமாய் நம்மை வருடுகின்றன.

கந்தர்வ க்ஷேத்ரம் என்ற படம் , தேவராஜனின் இனிய இசை, வயலார் ராம வர்மாவின் வரிகள், சுசீலாம்மாவின் இனிய குரல் எல்லாம் சேரும் போது ஒரு இனிய கானம் உருவாகாமல் போகுமா?

எத்தனையோ இனிய பாடல்கள் சுசீலா அவர்களின் மதுர குரலால் பெரும் புகழ் பெற்றுள்ளன. எளிய கேரள குடும்ப பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் மிக இனிமையானது கேட்க கேட்க அலுக்காதது என்பதில் ஐயம் இல்லை.
https://youtu.be/OLRAOF2Z_oc
அமுதம் தொடரும்....

Wednesday 14 December 2016

அலைகளில் தென்றல் வந்து அசைந்தாடும்

 அலைகளிலே தென்றல் வந்து விளையாடும் 
ஆனந்தம்  என்ன உறவா? சுகமா? 
என்று மஞ்சுளா முத்துராமனை பார்த்து கேட்கும் இப்பாடல் மறுபிறவி என்ற திரை படத்தில் அம்மா அருமையாகப் பாடியது.  அலைகளின் பின்னணியில் தென்றலை பாய்ந்தது என்றால் இந்த பாடலும் அதில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

        அந்த ஆரம்பம் இருக்கிறதே அலைகளில் என்று தொடங்கும்போது உடலுக்குள் மின்னலைகள் பாயும் உணர்வு.  உண்மையிலேயே இது தெய்வீக வரம்தான்.  இப்படி ஒரு குரல் அமைய என்ன கொடுப்பினை செய்தாரோ ? தெரியவில்லை.

    தாயமையும்  காதலும் ததும்பும் அப்பாடலில் மஞ்சுளா மிக அருமையாக ஒரு தாலாட்டும் தாயை  போலவே நடித்திருக்கிறார்.

பறவை இசை  பாடுவதும் உறவா சுகமா 
எங்கும் ஆனந்தம் பாடிடும் இயற்கை  
இன்ப  பாட்டொன்று  பாடும் இளமை 
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை 

எங்கும் இன்பம் பொங்கும் ஒரு சூழ்நிலை நம் மனதில்.  ஒரு புறம் அலைகள், மறுபுறம் இசை அலைகள் , இன்னொரு புறம் இனிய குரல் அலை அப்பாப்பா  இனிமை இளமை இன்பம் என அத்தனையும் வாரி வழங்கும் ஒரு பாடல்.  இதை பாட அம்மாவால் மட்டுமே முடியும்  வேறு யாராலும் முடியாது என்பது என்னுடைய தீர்மானம் ஆன முடிவு.

               மடியில் தவழும் குழந்தை போல  மிக அருமையான அழகான அமைதியான நடிப்பை  காட்டுகிறார். 

அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை 
அவள் துணையோடு வாழ்வது இன்பம் 
அதை சுவை யாக செய்வது மஞ்சம்
                                       இதை நான்  சொல்ல நேர்ந்தது துன்பம்                                           

என ஒவ்வொரு வரியிலும்  தேன் ஊற்றப்படுகிறது : காதுகள் இன்ப மழையில் நனைகின்றன.  

                இசை அமைத்தவர் டி .ஆர் . பாப்பா.  மிக நல்ல இசை .  மிக அருமையான படப்பிடிப்பு .  புனர்ஜன்மம் என்ற மலையாள படத்தில் சூர்யகாந்த கல்படவில் என்ற பாடலை நினைவூட்டுவது போல் இருப்பினும் இது ஒரு தனி ரகம் ராகம்.    இதில் மேலும் ஒரு இனிய செய்தி இரு பாடல்களையும் பாடியவர் இன்னிசை அரசியே.  பலர் இப்பாடலை நினைவு கூருகிறார்களோ  இல்லையோ என்னளவில் இது ஒரு சிறந்த பாடல்.  இந்த பெருமை முழுதும் அம்மாவையே சாரும்.  



அமுதம் தொடரும்..... 

Friday 9 December 2016

அணையாத தீபம் ஜெயலலிதா & சோ

அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளார்கள் இங்கே யாரோ யார் யாரோ? 

திரு . சோ அவர்கள் நடித்து இயக்கிய, முதல்வர் ஜெயலலிதா நடித்த யாருக்கும் வெட்கமில்லை என்ற படத்தின் பாடலை தற்போது பதிவு செய்வது பொரு த்தமாகவும் , இருவருக்கும் செய்யக் கூடிய அஞ்சலியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.


இருளில் ஓளி தீபம் ஏந்தி வரும் முதல்வரின் நடிப்பும் பாவனையும், அந்த நடிப்புக்கேற்ப இயைந்து வரும் சுசீலாம்மாவின் குரலும் பாடலின் தரத்தை எங்கேயோ கொண்டு போகின்றன.

லேசான சோகம் இழையோடும் சுசீலா அவர்களின் கணீர் குரலும், மென்மையான நடிப்பை வெளிப்படுத்தும் ஜெயலலிதா அவர்களின் இனிய தோற்றமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

கால் போன ஜீவனை தோள் மீது வைத்து காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்,... பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்.. என பாடும் போது சில விஷயங்கள் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நபி நாயகம் தன் நகர் மாறி சென்றார்.....
எல்லோர்க்கும் தாயான மாகாளி சக்தி.....
கலை மாது மேரி ஓர் விலைமாது என்று.... 

என்று பாடி பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என அனைத்து மதங்களையும் ஒரு பாடலில் இணைத்து இருப்பார் பாடலாசிரியர். மத ஒற்றுமையை ஒரு பாடலில் கூறியதுவும் இப்பாடலுக்கு ஒரு சிறப்பே. 


இந்த பாடலுக்கு இசை வழங்கியவர் ஜி.கே. வெங்கடேஷ் என கேள்வி பட்டிருக்கிறேன். பாடலாசிரியர் யார் என தெரியவில்லை எனக்கு. 

இரு பெரும் ஆத்மாக்கள் இனைந்து உருவாக்கிய படமும் பாடலும் மற்றொரு பெரும் பாடகியின் குரலால் ஜொலிக்கின்றன. காணொளிக் காட்சி அத்தனை திருப்தியாக இல்லை. 

RIP AMMA & CHO.


https://youtu.be/H9Jq2o6AUV4

அமுதம் தொடரும்...