அரும்பரும்பா சாரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ
தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனி இது தாலேலோ
மகளே நீ மயங்காதே மணிவிளக்கே கலங்காதே
பூச்சூடும் புது பூந்தேரே பாலாறே!
1992 ஆம் ஆண்டு வெளிவந்த சின்னத்தாயி திரைப்படத்தில் இளையராஜா இசையில் அம்மா பாடிய பாடல். நடிகை சபீதா ஆனந்த் என நினைக்கிறேன்.
அருமையான பாடல். ஆனால் அம்மா ரசிகர்கள் தவிர மற்றவர்களிடம் ரீச் ஆனதா? என்று தெரியவில்லை.
ஆடவன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு அவன் மூலம் ஒரு பெண் குழந்தையையும் பெற்று சமுதாயத்தில் வேசி நிலைக்கு தள்ளப்பட்டு வேறு எவனோ ஒருவனுக்கு வைப்பாட்டியாக வாழும் ஒரு பெண்ணின் அவலக்குரல் அம்மாவின் இனிய காத்ரத்தின் மூலம் துயரத்துடன் வழிகிறது.
தான் பட்ட துயரங்களை வேதனையை துயரத்தை தன் மகளும் அனுபவிக்க கூடாது என்பதை மிக அருமையான கதை போல தாலாட்டு போல கூறுவதை அம்மா அனுபவித்து பாடியிருப்பார். ஆனாலும் பின்னாளில் அந்த தாயின் கதையே அத்திரைப்படத்தில் அரங்கேறுவது வேறு விஷயம்.
அந்த கஷ்டத்தை
அந்த கஷ்டத்தை
ஒருவன் இசையினிலே ------
திசைமாறி நான் விழுந்தேனே
மனித குணங்களையும்
மாறும் இனங்களையும் அறியாமல் நான் தவித்தேனே
நஞ்சை விட கொடிது ஆடவரின் மனது
அன்னை அதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு
ஏமாந்தாள் தாயும்
என்னை போல நீயும்
ஆகி விடாதே பின்பு
அவதி படாதே
என்று பாடும் போது அனுபவ மிக்க பாடகி அனுபவமிக்க இசையில் வாழ்க்கையை அந்த அனுபவத்தை வெளிப்படுத்துவது என்பது பிற பாடகிகளால் கொணர முடியாது என்பதற்கு இந்த பாடலே ஒரு உதாரணம்,
அனுபவம், இனிமை, இசை, வார்த்தை , அம்மா இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பாடும் அம்மாவின் குரல் இந்த பாடலை வேறு தளங்களுக்கு கொண்டு செல்கிறது,
இரவு நேரங்களில் ஊர் உறங்கும் சமயங்களில் ஏதேனும் தனி இடத்தில் தனிமையில் இந்த பாடலை கேட்கும் அனைவரும் தங்கள் வாழும் உலகத்தை விட்டு வேறு உலகுக்கு செல்வது நிச்சயம். அதை சாத்திய படுத்திடுவது அம்மாவின் குரல் எனும் சத்தியம். ஒப்புக்கொள்கிறீர்கள்தானே!?!
https://www.youtube.com/watch?v=d-Yaul5Dnn8
அமுதம் தொடரும்....
semma sirrrrrrrr
ReplyDelete