அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்
அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன் அம்மாவின் விளைந்த அற்புதப் பாடல். இந்த பாடலை பலர் அம்மாவின் அடிமை ஆகிவிட்டனர் என்றாலும் இந்த கெட்டவர்கள் அது எந்த தலை முறையாக இருந்தாலும் அடிமை ஆகி விடவே வேண்டும் என்பது எனது முடிவு.
கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒரு குடும்பப்பெண் மது அருந்தி விட்டு பாடுவது போலெ அமைந்த இந்த பாடல் அம்மாவின் எங்கேயோ எட்டாத உயரத்துக்கு சென்று விட்டது.
கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒரு குடும்பப்பெண் மது அருந்தி விட்டு பாடுவது போலெ அமைந்த இந்த பாடல் அம்மாவின் எங்கேயோ எட்டாத உயரத்துக்கு சென்று விட்டது.
மது எடுத்தேன் உன் மலரடி நனைத்தேன் பாத பூஜைகள் முடித்தேன்
புது மயக்கம் இந்த மது மயக்கம் பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்
என்று பாடுகிற போது அம்மாவின் குரலில் இணையும் வேதனை, வெறுப்பு, கேலி, பரிதாபம் எல்லாருடைய உள்ளத்தையும் உருக்கும். அந்த கணவனை எல்லார் மனமும் வெறுக்கும்.
தன் வாழ்வு தன் கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே என்னும் வேதனையம் விரக்தியும் தன குரலில் பிரதி பலிக்க இந்த வரிகளை பாடுவார்,
சபை தனிலே நின்றாடிடும் பெண்மை சாவியை ஆடிடும் பொம்மை
பால் மயக்கம் சிறு பள்ளியிலே நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே கல் மயக்கம் நீ கொடுக்கையில் கண் மயங்கும் இந்தப்பெண் மயங்கும்
பாடலின் இடையில் லாலாலாலா என்று ஒரு ஹம்மிங் கொடுப்பார் பாருங்கள். என்ன ஒரு உல்லாசம். இறுதியில் வரும் மயக்கம் அப்பப்பா . அருமையான பாடல் அருமையான
நடிப்பு. வெண்ணிற ஆடை நிர்மலாவின் சிறந்த நடனம் எல்லாம் சேர்ந்து ஒரு பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.
https://www.youtube.com/watch?v=XvbnNnkjGnQ
அமுதம் தொடரும்......
No comments:
Post a Comment