Wednesday, 14 December 2016

அலைகளில் தென்றல் வந்து அசைந்தாடும்

 அலைகளிலே தென்றல் வந்து விளையாடும் 
ஆனந்தம்  என்ன உறவா? சுகமா? 
என்று மஞ்சுளா முத்துராமனை பார்த்து கேட்கும் இப்பாடல் மறுபிறவி என்ற திரை படத்தில் அம்மா அருமையாகப் பாடியது.  அலைகளின் பின்னணியில் தென்றலை பாய்ந்தது என்றால் இந்த பாடலும் அதில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

        அந்த ஆரம்பம் இருக்கிறதே அலைகளில் என்று தொடங்கும்போது உடலுக்குள் மின்னலைகள் பாயும் உணர்வு.  உண்மையிலேயே இது தெய்வீக வரம்தான்.  இப்படி ஒரு குரல் அமைய என்ன கொடுப்பினை செய்தாரோ ? தெரியவில்லை.

    தாயமையும்  காதலும் ததும்பும் அப்பாடலில் மஞ்சுளா மிக அருமையாக ஒரு தாலாட்டும் தாயை  போலவே நடித்திருக்கிறார்.

பறவை இசை  பாடுவதும் உறவா சுகமா 
எங்கும் ஆனந்தம் பாடிடும் இயற்கை  
இன்ப  பாட்டொன்று  பாடும் இளமை 
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை 

எங்கும் இன்பம் பொங்கும் ஒரு சூழ்நிலை நம் மனதில்.  ஒரு புறம் அலைகள், மறுபுறம் இசை அலைகள் , இன்னொரு புறம் இனிய குரல் அலை அப்பாப்பா  இனிமை இளமை இன்பம் என அத்தனையும் வாரி வழங்கும் ஒரு பாடல்.  இதை பாட அம்மாவால் மட்டுமே முடியும்  வேறு யாராலும் முடியாது என்பது என்னுடைய தீர்மானம் ஆன முடிவு.

               மடியில் தவழும் குழந்தை போல  மிக அருமையான அழகான அமைதியான நடிப்பை  காட்டுகிறார். 

அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை 
அவள் துணையோடு வாழ்வது இன்பம் 
அதை சுவை யாக செய்வது மஞ்சம்
                                       இதை நான்  சொல்ல நேர்ந்தது துன்பம்                                           

என ஒவ்வொரு வரியிலும்  தேன் ஊற்றப்படுகிறது : காதுகள் இன்ப மழையில் நனைகின்றன.  

                இசை அமைத்தவர் டி .ஆர் . பாப்பா.  மிக நல்ல இசை .  மிக அருமையான படப்பிடிப்பு .  புனர்ஜன்மம் என்ற மலையாள படத்தில் சூர்யகாந்த கல்படவில் என்ற பாடலை நினைவூட்டுவது போல் இருப்பினும் இது ஒரு தனி ரகம் ராகம்.    இதில் மேலும் ஒரு இனிய செய்தி இரு பாடல்களையும் பாடியவர் இன்னிசை அரசியே.  பலர் இப்பாடலை நினைவு கூருகிறார்களோ  இல்லையோ என்னளவில் இது ஒரு சிறந்த பாடல்.  இந்த பெருமை முழுதும் அம்மாவையே சாரும்.  



அமுதம் தொடரும்..... 

No comments:

Post a Comment