"மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி !
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!!
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி!!"
இந்த வரிகளை என்னால் மறக்கவே முடியாது. என்னால் மட்டுமல்ல. யாராலும்தான்.இந்த பாடல் அடிகள் சுசீலா அம்மாவுக்கென்றே அமைந்த வரிகள் எனலாம்.
இன்னமும் இளமையோடும், குழலையும் தோற்க வைக்கும் குரல் இனிமையோடும் பாடிக்கொண்டிருக்கும் பைந்தமிழ் தேவதையின் குரல் நம்மை வசீகரிக்கும் பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று.
அவளுக்கென்று ஒரு மனம் என்ற படத்தில் பாரதிக்கு அம்மா பாடிய பாடல் இது. இப்பாடலின் மூலம்தான் யாரோ ஒருவரால் அம்மா அழுததாகவும், அதனால்தான் அவர் பின்னாளில் அவர் தன் இசை அமைப்பில் அவரை பாட விடாமல் செய்ததாகவும் படித்திருக்கிறேன். ஆனால் அதனால் நஷ்டம் அவருக்கே தவிர நமக்கல்ல .
பெரும்பாலும் மேடையில் இந்தப் பாடலை பாடாத அம்மா ஒரு முறை இசைத் தொழிலாளர்கள் சங்கம் கூடிய மேடைமேடையில் இந்த பாடலை பாடினார். அதை அவரே தன இனிய குரலால் அந்த மேடையில் பதிவும் செய்தார் .
இந்தப் பாடலின் மயக்கும் இசை, சிறந்த படப்பிடிப்பு, பாரதியின் நடிப்பு இவையெல்லாம் வண்ணக்காவியமாய் நம் நினைவில் நீங்க இடம் பிடித்துள்ளன.
"நீரில் மிதந்தது இளம் மேனி நான் நாடு விட்ட தாமரை அன்றோ!" என்ற வரிகளில் ஏற்படம் சுகானுபவம் மறக்கவே முடியாது. பாரதியின் குரலை போல் தன் குரலை மாற்றிப் பாட எப்படித்தான் அம்மாவால் முடிந்ததோ! ஆச்சரியம்தான். !!!
"கன்னம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையோ " என்று தன காதலை மறைமுகமாக ததன் காதலனுக்கு வெளிப்படுத்தும் இடம் மெய் மறக்க வைக்க கூடியது.
இன்னும் இந்த பாடலை பற்றிய குறிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு பிடித்த இந்த பாடல் பற்றிய விவரங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மெய் சிலிர்க்க கூடிய ஒரு அனுபவம் இது.
அமுதம் தொடரும்.. .. ..
No comments:
Post a Comment