Friday, 21 October 2016

பாட்டு பாட வாயெடுத்தேன்

              குயிலுக்கு அறிமுகம் எதற்கு? அதன் குரலுக்குத்தான் அறிமுகம் எதற்கு? இது கருங்குயில் இல்லை வெள்ளைக்குயில்.  மரக்குயில் அல்ல மனிதக்குயில்.  பாடும் குயில் மட்டும் அல்ல. பேசவும் செய்யும் குயில். யாரை அது என்று தெரிகிறதா? கான சரஸ்வதி  நம் இசை அரசி நம் கண்ணால் காண முடிந்த இசை தேவதை சுசீலா அவர்களைத்தான்.  பாடுவதற்கென்றே பிறந்த குரல். பாசத்திற்கென்றே பிறந்த முகம் .பணிவதற்கென்றே அமைந்த குணம். கனிவதற்கென்றே பேசும் மொழி.  இன்னும் எத்தனை எத்தனையோ அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம். அம்மாவின் பாடல்களை கேட்பவன் அதனை ஆயுளுக்கும் மறக்க முடியாது. அப்பாடலின் உணர்ச்சிகளுடன் இணையாமல் இருக்க முடியாது.

           இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தெய்வத்தின் தெய்வம்  என்ற படத்திலிருந்து ஒரு பாடலை கேட்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை . "பாட்டு பாட வை எடுத்தேன் ஏலேலோ  அது பாதியிலே நின்னு போச்சே ஏலேலோ .  பேச ஒரு கிளி எடுத்தேன் ஏலேலோ அது பேசு முன்னே பறந்து போச்சே ஏலேலோ "

திருமணம் முடித்தவன் உடனே தன கணவனை இழந்து பாடும் பாடல் இது.  இதை பற்றி பல பதிவுகள் முன்பே வந்திருக்கலாம் .    ஆனால் இப்பாடல் வெளி வரும் பொது பிறந்திருக்காத  பல ஆண்டுகள் கழித்து பிறந்த.  அதற்கும் பல ஆண்டுகள் கழித்து கேட்ட ஒருவர் அப்பாடலில் இணையும் அதிசயம் சாத்யமாவதே ஒரு குரலால் தான்.  அக்குரலை பற்றி என்னவென்று சொல்ல? தெய்வத்தின் அனுகிரஹமன்றி வேறென்ன?

திருமணம் செய்து அனுப்பிய தந்தையின் சோகத்தை தன சோகத்துடன் இணைத்து பாடும் அக்குரலில் இருக்கும் துயரம்தான் எத்தனை அந்த நாயகியின் முகபாவம் . பாடும் தேவதையின் பனிக்குரல் இவை சேர்ந்து கண்ணீர்  தடுக்க இயலாது.

"வழியனுப்பி வைத்த தண்டை விழி மூடி தூங்கலையே" என்னும் போது ஒரு பெண்ணுக்கு திருமணம் முடித்து அக்கடா என்று அமரும் தந்தை அப்பெண் விதவை கோலத்துடன் மீண்டும் இல்லம் திரும்பி விட்டதை எண்ணி எவ்வாறு தூக்கமிண்டி துக்கத்துடன் தவிப்பாரோ அந்த ஏக்கத்தை நம் கண் முன் கொணர்வது அம்மாவின் குரல் அல்லவா?  அந்த வேதனையை தன குரல் மூலம் பிரதிபலித்து அனைவரையும் ஈர்க்கும் சக்தி அம்மா ஒருவரின் குரலுக்கே உண்டு.
வைதவ்யத்தின் கொடுமை யையும் விதவா விவாஹம் என்பது இல்லாத அக்கால கட்டத்தில் இனி தன வாழ்வு  எவ்வாறு முடியும் என்ற கவலையை  தாம்பத்ய சுகம் என்பதை இனி த்தான் வளவு காண முடியாது என்பதை 
" பூமாலை வாடலையே  ஏலேலோ பூட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ "  என்றும் "பள்ளியறை காணலையே பாலெடுத்து கொடுக்கலியே துள்ளி வந்து பாக்கலையே தொட்டு விளையாடலையே " என்றும் மனதை பிழியும் வரிகள் அம்மாவின் இந்த குறளி வரும் போது பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் கூடக்கண்ணீரால் கரைந்து ஓடுவர்.
இன்னும் இன்னும் வர்ணிக்கலாம் அம்மாவின் குரலையும் அதில் வழியும் அமுத இனிமையையும்.  ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ...? எனவே இப்போது நிறுத்தி கொள்கிறேன்.  வேறொரு பாடளுடன் சந்திக்கிறேன்.  

அமுதம் வழிவது தொடரும்....


No comments:

Post a Comment