Wednesday, 14 December 2016

அலைகளில் தென்றல் வந்து அசைந்தாடும்

 அலைகளிலே தென்றல் வந்து விளையாடும் 
ஆனந்தம்  என்ன உறவா? சுகமா? 
என்று மஞ்சுளா முத்துராமனை பார்த்து கேட்கும் இப்பாடல் மறுபிறவி என்ற திரை படத்தில் அம்மா அருமையாகப் பாடியது.  அலைகளின் பின்னணியில் தென்றலை பாய்ந்தது என்றால் இந்த பாடலும் அதில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

        அந்த ஆரம்பம் இருக்கிறதே அலைகளில் என்று தொடங்கும்போது உடலுக்குள் மின்னலைகள் பாயும் உணர்வு.  உண்மையிலேயே இது தெய்வீக வரம்தான்.  இப்படி ஒரு குரல் அமைய என்ன கொடுப்பினை செய்தாரோ ? தெரியவில்லை.

    தாயமையும்  காதலும் ததும்பும் அப்பாடலில் மஞ்சுளா மிக அருமையாக ஒரு தாலாட்டும் தாயை  போலவே நடித்திருக்கிறார்.

பறவை இசை  பாடுவதும் உறவா சுகமா 
எங்கும் ஆனந்தம் பாடிடும் இயற்கை  
இன்ப  பாட்டொன்று  பாடும் இளமை 
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை 

எங்கும் இன்பம் பொங்கும் ஒரு சூழ்நிலை நம் மனதில்.  ஒரு புறம் அலைகள், மறுபுறம் இசை அலைகள் , இன்னொரு புறம் இனிய குரல் அலை அப்பாப்பா  இனிமை இளமை இன்பம் என அத்தனையும் வாரி வழங்கும் ஒரு பாடல்.  இதை பாட அம்மாவால் மட்டுமே முடியும்  வேறு யாராலும் முடியாது என்பது என்னுடைய தீர்மானம் ஆன முடிவு.

               மடியில் தவழும் குழந்தை போல  மிக அருமையான அழகான அமைதியான நடிப்பை  காட்டுகிறார். 

அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை 
அவள் துணையோடு வாழ்வது இன்பம் 
அதை சுவை யாக செய்வது மஞ்சம்
                                       இதை நான்  சொல்ல நேர்ந்தது துன்பம்                                           

என ஒவ்வொரு வரியிலும்  தேன் ஊற்றப்படுகிறது : காதுகள் இன்ப மழையில் நனைகின்றன.  

                இசை அமைத்தவர் டி .ஆர் . பாப்பா.  மிக நல்ல இசை .  மிக அருமையான படப்பிடிப்பு .  புனர்ஜன்மம் என்ற மலையாள படத்தில் சூர்யகாந்த கல்படவில் என்ற பாடலை நினைவூட்டுவது போல் இருப்பினும் இது ஒரு தனி ரகம் ராகம்.    இதில் மேலும் ஒரு இனிய செய்தி இரு பாடல்களையும் பாடியவர் இன்னிசை அரசியே.  பலர் இப்பாடலை நினைவு கூருகிறார்களோ  இல்லையோ என்னளவில் இது ஒரு சிறந்த பாடல்.  இந்த பெருமை முழுதும் அம்மாவையே சாரும்.  



அமுதம் தொடரும்..... 

Friday, 9 December 2016

அணையாத தீபம் ஜெயலலிதா & சோ

அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளார்கள் இங்கே யாரோ யார் யாரோ? 

திரு . சோ அவர்கள் நடித்து இயக்கிய, முதல்வர் ஜெயலலிதா நடித்த யாருக்கும் வெட்கமில்லை என்ற படத்தின் பாடலை தற்போது பதிவு செய்வது பொரு த்தமாகவும் , இருவருக்கும் செய்யக் கூடிய அஞ்சலியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.


இருளில் ஓளி தீபம் ஏந்தி வரும் முதல்வரின் நடிப்பும் பாவனையும், அந்த நடிப்புக்கேற்ப இயைந்து வரும் சுசீலாம்மாவின் குரலும் பாடலின் தரத்தை எங்கேயோ கொண்டு போகின்றன.

லேசான சோகம் இழையோடும் சுசீலா அவர்களின் கணீர் குரலும், மென்மையான நடிப்பை வெளிப்படுத்தும் ஜெயலலிதா அவர்களின் இனிய தோற்றமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

கால் போன ஜீவனை தோள் மீது வைத்து காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்,... பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்.. என பாடும் போது சில விஷயங்கள் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நபி நாயகம் தன் நகர் மாறி சென்றார்.....
எல்லோர்க்கும் தாயான மாகாளி சக்தி.....
கலை மாது மேரி ஓர் விலைமாது என்று.... 

என்று பாடி பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என அனைத்து மதங்களையும் ஒரு பாடலில் இணைத்து இருப்பார் பாடலாசிரியர். மத ஒற்றுமையை ஒரு பாடலில் கூறியதுவும் இப்பாடலுக்கு ஒரு சிறப்பே. 


இந்த பாடலுக்கு இசை வழங்கியவர் ஜி.கே. வெங்கடேஷ் என கேள்வி பட்டிருக்கிறேன். பாடலாசிரியர் யார் என தெரியவில்லை எனக்கு. 

இரு பெரும் ஆத்மாக்கள் இனைந்து உருவாக்கிய படமும் பாடலும் மற்றொரு பெரும் பாடகியின் குரலால் ஜொலிக்கின்றன. காணொளிக் காட்சி அத்தனை திருப்தியாக இல்லை. 

RIP AMMA & CHO.


https://youtu.be/H9Jq2o6AUV4

அமுதம் தொடரும்...

Tuesday, 29 November 2016

சூர்ய காந்த கல் படவில் ஆரிய புத்ரண்டே பூமடியில்

"சூர்ய காந்த கல் படவில்
ஆரிய புத்ரண்டே பூமடியில்
நிண்ட ஸ்வப்னங்கலுத்தி கிடத்தி உறக்கு ஸ்வயம்ப்ரபே தன்கே உறக்கு உறக்கு"

தாலாட்டு என்றாலே அம்மாதான். நம்ம்ம் பெற்ற தாயை மட்டுமல்ல நாம் ணைவரும் பெறாமல் பெற்ற தாய், நம்மனைவருக்கும் 60 ஆண்டுகளாக தாலாட்டு பாடும் தாய் சுசீலா அம்மாதான். குழந்தைதையோ சிறுவரோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் தாலாட்டு பாடி உறங்க வைக்கும் தன்மை அவர் குரலுக்கே உண்டு.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த பாடல். மலையாள திரையுலகின் பொற் கால பாடல் கூட்டணியில் உருவான பாடல் இது. புனர்ஜன்மம் படத்தில் வயலார் இயற்ற தேவராஜன் இசையமைக்க அம்மா இசைத்த இனிய கானம்.

"சம்சார சாகர..... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
கை எத்துமென்கிலா கல்விளக்கின்
திரி தாழ்த்து
திரி தாழ்த்து" என முடிக்கும் போது காற்றும் கடலும் ஸ்தம்பித்து நிற்பது போன்ற உணர்வை நமக்கு தன் மதுர குரல் மூலம் வழங்குகிறார்.

கல் விளக்கின் திரி தாழ்த்து திரி தாழ்த்து என்று அவர் இழையும் போது நாமே சென்று அந்த கல்விளக்கின் திரியை இறக்கி விடலாமா என்று நினைக்க தோன்றுகிறது.

"சிந்தூர புஷ்ப பராகங்கள் சார்த்தி நின் சீமந்தினியாயி.... என்று தொடங்கி அவர் பாடும் வரிகளில்
" சுவர்க்கத்தில் நின்னொரு கற்பக பூ மழை 
சொரியூ மழை சொரியூ "
என முடிக்கும் போது கீழே கடல் அலயடிக்க மேலே மெல்லிய மழை பொழிய சில்லென்று நிற்கும் ஒரு உணர்வு பிரவாகம் ஏற்படுவதை யாராலும் உணராமலிருக்க முடியாது.

ஜயபாரதியின் மிக அழகான உயிரோட்டமிக்க தத்ரூபமான நடிப்பும் இப்பாடலுக்கு உயிர் கொடுக்கிறது. நாமும் சூர்ய காந்த கல்படகில் ப்ரயானித்த சுக அநுபவத்தை அம்மாவின் குரல் மூலம் இப்பாடல் தருகிறது. கேட்போம் இன்பமடைவோம்.

அமுதம் தொடரும்.....


https://youtu.be/mid__haH5Wg

Wednesday, 16 November 2016

தொடுவானம் ரொம்ப தூரம் தொட்டு பார்க்க ஆசை உனக்கு

" தொடுவானம் ரொம்ப தூரம்
தொட்டு பார்க்க ஆசை உனக்கு கையோடு சேருமோ
இல்லை கனவாக மாறுமோ!"

அவள் பாரதி கண்ட புதுமைப் பெண். கொடுமை கண்டால் பொங்கி எழுவாள். அதனால் சிறையில் 7 ஆண்டு அடைபட்டு பரோலில் வெளி வந்த பின் அவளை சமூகம் குடும்பம் நடத்தும் முறையை எண்ணி பாடும் பாடல்.

நியாய தராசு படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சுசீலா அவர்கள் பாடிய பாடல். நடித்தவர் ராதா.

சிறந்த படமாகவும் சிறப்பான பாடலாகவும் இருந்தாலும் தோல்விப் படங்களில் இருக்கும் அருமையான பாடல்களும் கவனம் பெறாமல் போகும் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த உதாரணம்.

"சுடுகின்ற கோடையில் வெகு தூரம் நான் நடந்தேன்
சுகமான மேகமே மழை நீரை நீ கொடுத்தாய்
தண்ணீர் எந்தன் கையில் வந்தும் தாகம் தீர்க்க யோகம் இல்லை
தண்ணீர் தாகம் இல்லை கண்ணீர் சாபமா"

வாழ்வின் சோகம்சொந்தங்கள் சந்தர்ப்பவாதம் சமூகத்தின் புறக்கணிப்பு இவை அனைத்தையும் கலந்து பாடும் நாயகியின் உணர்ச்சிகளை தன் குரலில் அச்சு அசல் பிசகாமல் ப்ரதிபலிப்பார் அம்மா.


"பொய்யான வேடங்கள்
பல போலி பாத்திரங்கள்.
புரியாத மேடையில் பல பொம்மை நாடகங்கள்.
கானல்நீரில் தூண்டில் போட்டு
கனவில் பாடும் காதல் பாட்டு
வாழ்வே சாபமா
பெண்ணின் அன்பே பாவமா'

பாலைவனத்தில் காணும் சோலைவனம் போல் கிடைக்கும் ஒரு நட்பும் நிலைக்குமோ என்ற ஏக்கமும், சொந்தங்களின் நடிப்பால் ஏற்படும் தாக்கமும் சோகம் இழை ஓட அருமையாக பாடி இருப்பார் அம்மா.

தன்னை புரிந்து கொள்வோர் யருமில்லையோ என்ற துயரம்தான் குரலில் தொனிக்க அம்மா பாடும் இப்பாடஎன்னை மட்டுமல்ல அம்மாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்றால் இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அமுதம் தொடரும்.......


https://youtu.be/BJWC5c0wvA4
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

Monday, 14 November 2016

வட பத்ர சாயிகி வரஹால லாலி

" லாலி லாலி லாலி லாலி
வட பத்ர சாயிகி வரஹால லாலி !
ராஜீவ நேத்ருணிக்கி  ரத்தநால லாலி!
முறி பால கிரிஷ்ணுடுகி  முத்தியால லாலி!
ஜகமேலு ஸ்வாமிக்கி பகடால லாலி!


                        1986 இல் வெளி வந்த ஸ்வாதி முத்யம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் , இசையரசி பாடிய பாடல்.  நடித்தவர் ராதிகா .  குரல் இசைக்கேன் பிறந்த அம்மாவின் மிக சிறப்பாந பாடல்களில் ஒன்று.  மேலும் அம்மாவின் பாடல்களின் ஸ்பெஷாலிட்டி என்றாலே தாய்மை ததும்பும் அவர் இனிய குரல்.  அதை மீண்டும் நிரூபித்த பாடல் இது.

                        குழந்தை கிருஷ்ணனாக தன் குழந்தையை பாவித்து தாலாட்டி பாடும் தாலாட்டு பாடல் இது.  அம்மாவின் பாடல்களை சும்மா கேட்டாலே ஏற்படும் மகிழ்வு தாலாட்டு பாடல்களால் இன்னும் இரட்டிப்பு ஆகும் என்பது 
நம்மனைவருக்கும் தெரியும் அல்லவா?!  இந்த பாடலும் அதே ரகத்தை சேர்ந்தது. 

     ஆலிலை மேல் துயில் கொண்ட கண்ணனுக்கு லாலி, தாமரைக்காண்ணானுக்கு லாலி , பாலக்ரிஷ்ணனுக்கு லாலி, என்றெல்லம் தன் குழந்தையை பாராட்டும் தயாகாவே மாறி பாடுகிறார் அம்மா.  மேலும் யாரெல்லாம் தன்  பிள்ளையை பாராட்டுகிறார்கள் எண்டு அவர் போடும் பட்டியலை கேளுங்கள்.  

" கல்யாண ராமுடுக்கி  கௌசல்ய லாலி!  யதுவம்ச விபுனி கி யசோத லாலி !!
கரிராஜ முகுனிகி கிரி த னய லாலி! பரமாத்மா பவுரினிக்கி பரமாத்மா லாலி!!"

இவ்வாறெல்லாம் புகழ்ந்து  விட்டு, 

 ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ  ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ  என ஒரு ஆராரிரோ இசைப்பார் பாருங்கள் தூங்காத குழந்தை கூட தூங்கி விடும் .

"அலமேலு பதிக்கி அன்னமய்ய லாலி !  
கோதண்ட ராமுடுக்கி கோபைய்ய லாலி!!
ஷ்யாமளங்குனிக்கி ஷ்யாமய்ய ய்ய  லாலி ! 
யாதவ விபு ணிக்கி தியாகய்ய லாலி !!"


என்று தாலாட்டின் சிகரமாக அமைந்த இந்த பாடல் தெலுகு திரையுலகில் மறைக்க , மறக்க முடியாத பாடல்.


        இதன் தமிழ் பாதிப்பும் மிக அழகாக  வைரமுத்துவால்  இயற்றப்பட்டு , அம்மாவால் பாடப்பட்டு  புகழ் பெற்றது என்றாலும்,  மூல மொழியில் கேட்கும் சுகமே தனி என்பதை அனைவரும் ஒப்பு கொள்வார்கள்.  ஏனெனில் அது சுந்தர தெலுங்கு அல்லவா?!?

          எது எப்படி இருப்பினும் அம்மா பாடிய   தாலாட்டு பாடல்களில் இப்பாடலும் ஒரு மணி மகுடம் . என் இதயம் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்பதுடன் நிறைவு செய்கிறேன்.

அமுதம் தொடரும்.......


https://youtu.be/Lf6joXM_jHQ


                  

Saturday, 12 November 2016

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!
கரையான் அறியாத்த சிரிக்கான் அறியாத்த களிமண் ப்ரதிமகளே!
மறக்கு நிங்களீ தேவதாசியே! மறக்கூ மறக்கு!
விரக்தியின் விளிம்பில் நின்று பாடும் பாடல்.

சோகத்தின் உச்சத்தை வாழ்வின் துயரத்தை விவரிக்கவொண்ணா வார்த்தைகளில் அடிபட்ட குயிலின் துக்கத்துடன் நம்மிடம் பகிரும் இசை தேவதையின் குரல்.

'ஆயிரம் ஆயிரம் அந்தபுரங்களில் ஆராதீச்சவள் ஞான்! நிங்கள் ஓரிக்கள் சூடி எறிந்தொரு நிஷாகந்தி ஆயி ஞ்சா ன்.!"

இரக்கமே இரங்க கூடிய சூழலில் இரங்கத் தக்க இந்த பாடலை தன இனிய குரல் மூலம் பாடி நம்மையும் இரங்க விக்கிறார் சுசீலாம்மா.

"கண்ணீரில் முங்கிய துளசி கதிராய் கால்கள் வீணவள் நான்!
கால் கல் வீண வள் ஞ்சான். !"

1967 இல் வெளி வந்த அக்னிபுத்ரி என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை ஷீலாவுக்காக பாடிய இந்த பாடலை கேட்கும் போதே அந்த குரலின் சோகம் நம் இதயத்தை பிழிகிறது.

மிக சிறப்பான இசை , ஆனால் நடிகர் பிரேம் நசீரின் பாடலுக்கு சிறிதும் பொருத்தமில்லாத நடிப்பும், முக பாவங்களும், ஷீலாவின் மிகையில்லாத நடிப்பு எல்லாம் சேர்ந்து உயிர் பெறுவது அம்மாவின் அழகு குரலால்தான் என்பதை எல்லாரும் ஒப்புக்கொண்டேதான் ஆக வேண்டும்.

கால்கள் வீணவள்; கால் கல் வீணவள் என்று சொல்லை பேதப்படுத்தி அதன் பொருளை வேறுபடுத்தி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது கான தேவியின் குரல். 

சோகப் பாடல்களின் உச்சத்தில் நிற்கும் இப்பாடல் மலையாள திரை உலகின் evergreen பாடல்களின் பட்டியலில் உச்ச இடம் பெற்று இருப்பதே பாடலின் வெற்றி பாடகியின் வெற்றி. அப்பாடகி வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அதை ரசிக்கும் பேறு பெற்றதே நமது வெற்றி. 

கண் திறக்காத தெய்வங்கள் நம் காதைதிறந்து பாட்டை கேட்க வைத்ததே நமக்கு கிடைத்த வெற்றி.

அமுதம் தொடரும்

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. "

ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்.. " 

கட்டிலா தொட்டிலா என்ற திரைப்படத்தில் அம்மா பாடிய பாடல். சிவகுமாரும் கல்பனாவும் நடித்துதுள்ளனர். இசை வி. குமார். ஒரு விசித்திரமான நடன அசைவுடன் இந்த பாடலை சுசீலாம்மா பாடும் போது ஒரு மோக மயக்கம், கிறக்கம் கேட்போருக்கு கட்டாயம் ஏற்பட்டே தீரும். அதிலும் அவர் பாடலின் குரலின் ரசிகர் என்றால் கேட்கவே தேவை இல்லை.
" ஒருவித மயக்கம் உன்னிடம் எனக்கும்'என தொடங்கி ஒரு ஹம்மிங் இசைப்பார் பாருங்கள். இல்லை இல்லை கேளுங்கள். அப்பப்பா! நமக்கே ஒருவித மயக்கம் அம்மாவிடம் அவர் தேன் குரலிடம் வந்தே தீரும்.
காதல் கொண்ட பெண் தன் நிலையை "வாய் கொஞ்சம் வெளுக்கும் விழி கொஞ்சம் சிவக்கும் நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்' காதலனிடம் கூறுவதை ஒரு 18 வயது பெண்ணின் காதல் குரலில் கன்னி குரலில் அம்மாவாக பல பாடல்களில் நமக்கெல்லாம் தாலாட்டு பாடிய அம்மா பாடும் போது அடடா அந்த இசை பொற் கால தேவதை நம்மை மயங்க வைக்கிறாள்.
காதலன் தோட்ட அந்த ஸ்பரிசம் அவளை என்னமோ செய்கிறது
"நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல் ஓடும் காரணம் நால்விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய் ஆடும் காரணம்" இவ்வரிகளை கேட்டால் நம் நாடி நரம்பில் ஒரு இசை மின்னல் பாய்கிறது.

'ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க எழுதும் மன்னவா எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ முழுதும் சொல்லவா. மடித்தான் மஞ்சம் மலர் மஞ்சம் இதழ் தான் கிண்ணம் மது கிண்ணம் இடைத்தான் மேடை மணிமேடை இன்னும் என்ன சுகம் தேவை பருவங்கள் நமக்காக" 
என நம்மியும் பருவ போதையில் ஆழ்த்தும் அந்த வசீகரம் அவர் குரலில் மட்டுமேயன்றி வேறு யார் குரலிலும் கேட்க முடியாத பொக்கிஷம்.

இந்த பொக்கிஷம் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமது பாக்கியம். அந்த இனிய குரலை புகள்வதே சிலாக்கியம். ஒரு வித மயக்கம் சுசீலாம்மாவின் குரலில் எனக்கும்ம்மம்மம்..

அமுதம் தொடரும்
Quick reply to "sabhapathy narashimha elangovan" <elangovansmart@rediffmail.com>

பூவினும் மெல்லிய பூங்கொடி

பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இந்த மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க தினம் வாழ்க
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக.."!

மிக இனிமையும் இளமையும் நிறைந்த அம்மாவின் குரல் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

பூவினும் மெல்லிய இனிய குரலில் அம்மா பாடிய பாடல் இது. கண்ணன் வருவான் திரைப்படத்து பாடல். ஆண் குரலில் TMS உம், பெண் குரலில் அம்மாவும் பாடியது. இசை அமைத்தவர்சங்கர் கணேஷா. ? சரிவர தெரியவில்லை. மிக இளமையான தோற்றத்தில் லட்சுமியும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் காட்சியளிக்கின்றனர்.

பாடலின் இனிமை பாடல் வரிகளில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் குரலும் இசையும் சேர்ந்து மயக்கமூட்டுகிறது.

ஆண் பாடும் பாடலில் உள்ள கருத்தாழம் இதில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் குரல் பாடலை தூக்கி நிறுத்தி மிக அருமையான ஒரு மெல்லிசை பாட்டாக மலர்விக்கிறது. படத்துடநினைந்த கருத்துகள் கொண்ட பாடலோ என்னமோ?
லட்சுமியின் நடிப்பு அம்மாவின் இணைய குரலுக்கு அழகூட்டுகிறது.. நிர்மலாவின் கோணங்கி தனமான சேட்டைகள் படம் வந்த காலத்தில் புதுமையாக இருந்து இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும்அஅம்மாவின் மிக சிறந்த பாடல்களில் இதுவுமொன்று என்பதில் சந்தேகமே இல்லை.

அமுதம் தொடரும்....


https://youtu.be/IblCqG52Dn4

குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே


"குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே குளிச்சு தொழான் வன்ன வார்முகிலே
இள வெயில் காஞ்சு காஞ்சு நடக்கும் நினைக்கிப்போள் 
இள மானினே போலெ செறுப்பம்"

ஜி. தேவராஜனின் இசையில், மாங்கொம்பு கோபாலகிருஷ்ணன் எழுதிய பாடல். 

அம்மா பாடியது. 1976 இல் வெளிவந்த மிஸ்ஸி திரைப்படத்தில் இடம் பெற்றது.

இப்பாடலின் ஆரம்பமே விடியற்காலை நேர பூபாள ராக இசை போலவும், மெதுவாக மொட்டு அவிழும் மலர் போலவும், பனி காலத்து சூடே இல்லாத இதமான சூரியன் போலவும் அம்மாவின் அழகு குரலில் விரிகிறது.

" சந்தன குளிர் காற்று திளகும் நின் சிறகுகள் உள்சாகத் திடுக்கம்!
விண்ணிலே மந்தாகினியோடுழுகும் நின் 
கண்ணிலோர் இந்திர சாப திளக்கம்!"

அப்படியே இந்த வரிகளை அவர் குரலில் கேட்கும் போது, பனி நிறைந்த ஒரு மலை மீது சில்லென்று அமர்ந்து , உள்ளும் புறமும் குளிர்ச்சி பொங்க (பட்டுப்பூச்சியை) இந்திர சாபத்தை, வண்ணங்கள் ஒழுக பார்ப்பது போன்ற ஸ்வர்க்கானுபவம் நம் மனதில் மாயை போல் உருவாகிறது இல்லையா?

"ஆகாசம் வேனலின் திர நீக்கி வர்ஷத்தின் துகில் அணிஞ்சனையும் போள்
யத்ர மேலோஜ்வல ........... ஷோத்ரம் போல் மண்ணில் வீனுடைஞ்சாலோ"
இவ்வரிகளை கேட்கும் போது உள்ளம் எங்கோ பறக்கிறது. சமஸ்க்ருதம் கலந்த மலையாள மொழி அம்மாவின் அழகான உச்சரிப்பில் மேலும் அழகு பெறுவதையும் இனிமை அடைவதையும் எண்ணி புளகாங்கிதம் ஏற்படுகிறது.

என் மனதை கவர்ந்த இப்பாடலின் சுகானுபவத்தை இழக்க விரும்பாமல் நான் இப்பாடலின் காணொளியை காண்பதே இல்லை. 

இரவு நேர இருளில் இப்பாடலை அமைதியான சூழலில் கேட்போருக்கு மட்டுமே பாட்டின் அருமையும், படகின் பெருமையும் இனிமையும் விளங்கும் என்று நினைக்கிறேன். சரிதானே!!

அமுதம் தொடரும்....

கண்ணுக்கு மை அழகு


" கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு"

1951 இல் கன்ன தல்லி திரைப்படத்தில் எந்துக்கு பிலிச்சாவ் ஏந்துக்கு? என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆன அந்த பெண்மணி தென் இந்தியாவையே தன் இசை குடை கீழ் ஆண்டு விட்டு அமைதி காணும் நேரத்தில் இசைப்புயலே நான் என்று வந்த A.R.Rahman இசையில் தன் புதிய முகத்தை புதிய முகம் படத்தில் பாடிய பாடல் இது. 

முதலில் வரும் அந்த ஆலாபனையே நம்மை கிறங்க வைக்கும். 1951 க்கும் 1993 க்குமிடையே சுமார் 40 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகள் திரை உலகில் நிலைத்து நிற்பது ஒரு சாதனை என்றால், தன குரல் இனிமையை தக்க வைத்து கொள்வது பெரும் சாதனை. அதிலும் தன்னை ஓரம் கட்ட எண்ணும் சில இசை அமைப்பாளர்களிடையே தன் இருப்பை தக்க வைத்து புதிதாய் வந்த புயலை, இசை புயலை தன்னை நாடி பாட வைக்க செய்வது பெரும் சாதனை மட்டுமல்ல அரும் சாதனை.

புதிய முகத்தில் பாடிய இந்த பழைய முகம் குரலில் மட்டும் நமக்கு அறிமுகம். இனிமையில் நமக்கு தெரி முகம்.

கணவனுடன் கொஞ்சி விளையாடம் இளம் பெண்ணின் நாணத்தை இதத்தை அப்படியே தன் குரலால் பதிவு செய்கிகிறார் சுசீலா.

"ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு
அன்பான முத்தத்தில் கலை ந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிழை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு"
என அட்சர சுத்தமாக பாடுவது சிலருக்கே வாய்த்த வரம்.

' மழை நின்ற பின்னாலும் இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இறவோடுத்தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நன் அழகு"

கூடல் முடிந்த பின் இயற்கையை மகிழ்வூட்டும் விதமாக கவி வைரமுத்து எழுதிய பாடலை மேலும் மெருகூட்டுகிறார்.

இயற்கை என்றும் மாறாதது
இமயம் என்றும் மாறாதது
அதுபோல் தன் குரல்
இனிமையும் என்றும் மாறாதது
என நமக்கு நிரூபிக்கிறார் சுசீலா.

அவருடைய இனிய பல பாடல்களில் இதுவும் சிறந்ததுஎன்றால் மறுக்கவா போகிறீர்கள்?

அமுதம் தொடரும்......


https://youtu.be/gzjIZdTThvs

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே...!
எத்தனை பேர் தாலாட்டு பாடினாலும் தென்னிந்திய குழந்தைகள் அனைவருக்கும் ஒரு குரலின் தாலாட்டு மட்டும்தான் மிகப்பிடிக்கும். பெரும்பாலோர் அந்த குரலின் தாலாட்டைக் கேட்டு வளர்ந்தவர்களேதான். அக்குரல் யாருடையதென்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

80 களின் இறுதியில் வெளிவந்த நினைவுச்சின்னம் திரைப்படத்தில் நடிகை ராதிகாவுக்காக பாடிய பாடல். 

குழந்தையை தாலாட்டும்போது மித உயர்வாக பாடும் மரபையொட்டிய பாடல். ஆண்டாள் பாடலின் முதல் வரியை இதில் பயன் படுத்தி இருப்பார் பாடலாசிரியர்.

ஏலே இளங்கிளியே என்னாசை 
பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீஞ்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே"
என்று அம்மா பாடும்போது கிராமத்து பாடல் போன்ற உச்சரிப்பில் நம்மை மகிழ் வைக்கிறார்.

கிராமத்து தாய் போன்ற வடிவில் ராதிகா நடிக்கும் போது அவர் வடிவிக்கேற்ப தன குரலையும் உச்சரிப்பையும் மாற்ற முடிவது அவரால் மட்டுமே முடியும்.

"குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேட்காதவர் " என்ற வள்ளுவரின் வரிகளை சற்றே மாற்றி,


"குழலோடும் யாழ் ஓடும் இசை கேட்குகும் பொழுது மழலை உன் குரல் போல இசையாவதேது. யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை. அன்பிலே அன்பை இணைத்து .........'
இணைத்து தன் குழந்தை தெய்வத்தால் வழங்கப்பட்ட வரம் என நினைக்கும் தாய் மனதை கவி எழுத அதை தன் குரலால் பெருமிதம் பொங்க பாடி நம்மையும் மகிழ்விக்கிறார் சுசீலாம்மா.

"மலை மீது ஓடி வரும் நதி, அலை வீசும் கடல்" என்றெல்லாம் தன குழந்தையினை புகழும் தாய் மனம் தன குழந்தையின் மீது கண் பட்டு விடக்கூடாது என " மூடடி வாசற் கதவை கண்கள்தான் பட்டுவிடுமே பாடடி பேச
பாசக் கவிதை நெஞ்சம் தான் கேட்டு விடுமே" எனக்கூறி தன் தாய் பாசத்தைவெளியிடும் பாடல், மிக அழகுற அம்மாவின் சற்றே கனத்த குரலில் வெளி வருகிறது.

90 களின் தொடக்கத்தில் வந்த இப்பாடல் மிகப்பெரிய அளவில் புகழப்ப டவில்லை என்றாலும் என் மனதை கவ்விய தாலாட்டு பாடல்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை

அமுதம் தொடரும்.......

https://youtu.be/iAbOJ1wF5sY

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்
https://youtu.be/yhyPzy2_q9M

'அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில்
அர்ச்சனா புஷ்ப மால்யமாய்
நித்யவும் க்ருஷ்ண பூஜ செய்யுன்ன பக்த லோலயாய் ராதயாய்!"

க்ருஷ்ண பக்தர்கள் மட்டுமல்ல. அஷ்ட மங்களங்களும் வேண்டுவோர் யாராயிருந்தாலும் கேட்க வேண்டிய கிருஷ்ண கானம்.

செந்நாய வளர்த்திய குட்டி படத்தில்
, மாங்கொம்பு கோபால கிருஷ்ணன் இயற்றி, அர்ஜுனன் இசை அமைத்த பாடலிது.

ஆரம்பமே அமர்க்களமாக கணீர் என்ற தொனியில் அம்மா ஆரம்பிக்கும்போது அதில் நாமும் ஒன்றுபடுகிறோம். தினமும் க்ருஷ்ண பூஜை செய்ய விரும்பும் ராதயாக மாறிவிடுகிறோம். கிருஷ்ண பிரேமிகளாய் நம்மை மற்றும் சக்தி அந்த இனிய குரலுக்கு இருக்கிறது போலும். பல கிருஷ்ணன் பாடல்களை பாடிய குரல் அல்லவா!?!

"வஸ்ர மேக விரலி லாகாசம்
வஜ்ர மோதிரம் சார்த்தும்போல்
எண்டே மௌனமனோரதத்திலே
மஞ்சுள மயில்பீலிகள்
நின் கிரீடத்தில் சூடுவான் இனி எந்து தாமசம்? கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா..."

இவ்வரிகள் நம் காதுகளில் ஒலிக்கும் பொது நம் கண்முன்னே கிரீடத்தில் மயில் பீலி அசைந்தாட , ஆழிலாயின் மீது படுத்து தன கால் விரலையே சுவைக்கும் குழந்தை கண்ணன் ப்ரத்யட்சமாய் கட்சி தருவது எப்படி? இசையலா? பாட்டாலா? பாடியவராலா? இவை அனைத்தும் சேர்ந்தா?

"இந்திரநீல தடாகமாய் மாறும் ஈ மிழிகள் நீ கண்டுவோ
மாரிலே குளூர் சந்தன துளி மான்யத நீ அறிஞ்சுவோ
சுப்ரசாதங்கள் நேடு வான் எண்டே கிருஷ்ண நாதனே
கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா!"

அழகிய கண்ணனின் நீல விலிகளையும், அதை காண்போரின் மணக்க குளிர்ச்சியையும், தன் குரலால், அதுவும் கண்ணன் கையில் உள்ள புல்லங்குழலாய் வெளிப்படுத்தும் அம்மாவின் குரல் ஜாலம் நம்மை வசிய படுத்தி கிருஷ்ணனிடம் ஈர்க்கிறது. 

எப்படிப்பட்ட பாட்டாடாயிருப்பினும் அது சென்று சேரும் வாகனம் பாடுபவரின் குரலே. அம்மாவின் தங்க ரத்த குரல் எனும் வாகனம் ஏறி வரும் இப்பட்டு கிருஷ்ண கானங்களில் மிக சிறந்த ஒன்று என்பதில் எனக்கு ஐயமில்லை. உங்களுக்கும் அப்படித்தானே!

அமுதம் தொடரும்.......

டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ! லவ் யூ!! லவ் யூ

" டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ  லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ  லவ் யூ! லவ் யூ!! லவ் யூ!!!
என்னை விட்டு போகாதே மன்னன் உன்னை என் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்  
ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ!"

            ப்ரியா திரைப்படத்தில் இளையராஜா இசையில் சுசீலா அவர்கள் பாடியது.  முதன் முதலில் தமிழ் திரை உலகில்  டிஜிட்டல் முறையில் ஒலிப்பதிவு  செய்யப்பட்ட படம்.

          அழகான ஸ்ரீதேவி, அருமையான வண்ணப்படம், பாடலின் ஆரம்பத்தில் அசத்தும் இசை, என ஒவ்வொன்றும் மிக சிறந்த முறையில் அமைந்த பாடல்.  நீச்சல் உடையில் ஸ்ரீதேவி வரும்போது அம்மாவின் குரலில் ஆனந்தம் பறக்கும், அரங்கில் விசில் பறக்கும்.  முதல் சரணத்தில் ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ  என்று அவர்  இழுக்கும் போது  ஒரு வெஸ்டர்ன் பாடகியை போல மிக அருமையாக ஈசாய்ப்பாரே! அப்பப்பாப்பா!  இனிமை இனிமை இனிமை அள்ளும் .  குரலோ துள்ளும் .


 " யாரும் சொல்லாமல் நானே ஆசை  என்றால்  என்ன வேகம் என்றுகண்டேன் 
           மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா ஆசை கொள்ள ஓடிவா 
               கனி தரும் கோடி இதை அணைத்திட பூஞ்சோலை வா 
ஐ  லவ் யூயூயூயூயூயூயூயூ!"


                ஐயோ ஐயோ கொள்ளை இனிமை நம் உள்ளத்தை  கொள்ளை கொள்ளும் .  மிக அதிகமாக வர்ணிக்கிறேன் என்று இதை படிப்பவர் எண்ணலாம் .    "இசை உலகின் இனிய பு துமை ஆன வாசலில்  அந்த வடுகுப் பெண்  நின்று கொண்டு இருந்தார் "  என்று திரை இசை அலைகள் என்ற  நூலில் எழுத்தாளர் வாமனன்  அவர்கள் வர்ணிப்பதை படித்த பின் இந்த  பெண்ணை வடுகுப்பெண் என்று எண்ண  தோன்றும்.

           இந்த திரை படத்துக்கு  சில ஆண்டுகட்கு முன் ஊட்டி வரை உறவு என்ற படத்தில் "பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓஒ ஓஒ ஓஒ "என்று இசைப்பாரே அதே இனிமை 10 ஆண்டுகளுக்கு பின்னும் தொடர்கதையாகி உள்ளது என்றால் மிகையில்லை .

             இசைக்குயிலின் இனிய ஆலாபனையில் இப்பாடல் ஒரு மேலே கல் என்றால் மிகையில்லை .

 "காதல் இல்லாத  வாழ்வில் என்ன இன்பம் 
சொல்ல என்ன வெட்கம் அங்கே... ... " 
இவ்வரிகளையே நாம் இவ்வாறு மாற்றலாம்.  அம்மாவின்  குரல் கேட்கும் போது என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் என்று.நான் சொல்வதில் தவறுகள் இல்லையே. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இப்பாடலை நீங்களும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்வதில் 
சுரப்பது ஆனந்தம்! 
  பிறப்பது பேரின்பம்!!

 இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இதே பாடலை கன்னட மொழியில் வேறு ஒருவர் பாட கேட்கும் போதுதான் இசை அமைப்பாளர்கள் ஏன்  இப்படி அம்மாவை விட்டு விட்டு வேறொருவரை பாட வைத்து பாடத்தையே சொதப்புகிறார்கள் என்ற எண்ணம் நம் நாணத்தில் நிழலாடுவதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
அமுதம் தொடரும்....


Subscribe & Stay connected: http://www.youtube.com/subscription_c...
add_user=lehrenTamil

Thursday, 3 November 2016

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு சீதே

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு  சீதே 
மரளி பந்தெளு  சீதே!  
ஸார்வ பௌமா ஸ்ரீ ரமா சந்திரன  ப்ரேமதே ஆக்ரே ஒண்தே
 தா செந்தெளு ஆ மாதே !

சரபஞ்சரா  திரைப்படத்தில் நடிகை கல்பனா நடிப்பில்  கொலு நிகழ்ச்சி ஒன்றில் பாடுவது போல அமைந்த இப்பாடல் அம்மாவின் இனிய குரலில் ஒலிக்கும்.

               இராமாயணத்தில் சீதை மீண்டும் காட்டுக்கு போன கதை மொத்தமும் அவள் பட்ட வேதனைகளும். லவ குசர்களின் ஜனனமும் அத்தனையும் அம்மாவின் குரலில் வேதனையோடு வெளிப்படும் போது அதற்கு கட்டுப் படாதவர்  எவரும் இருக்க முடியாது.

    " அக்னி பரீக்ஷய சதவ பரீக்ஷய புரி யாதளு  சீதே
           அக்னியே ததித்ததே போஷித்தீரா சீதே புனீ தே! சீதே புனீ தே!!
             அல்பாஷாநத கல்பிதே மாடுதே அழுகித்தே ஸ்ரீ ராமா 
             சீதே  கலூஷிதே சீதே திவேஷிதே   "  

என்று உயிரை கொடுத்து  பாடும் பொது உருகாத மனமே இருக்க முடியாது. சீதையின் துயரை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. 

                      அந்த பெண்  எப்படியெல்லாம் கர்பிணியாகி  காட்டில் கஷ்டப்பட்டாளோ ? என்ற எண்ணம்  நம்  மனதில் கட்டாயம் தோன்றியே  தீரும். அக்னி பரீட்சையின்  விளைவு ஒரு பெண் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது  என்பதை அம்மாவின் குரல் மூலமே அறிய முடிகிறது.

"பூர்ண கர்ப்பிணிய புண்ய ரூபிணிய கண்டனு வால் மீகி 
லோக மாதகே சோக கார கவே நிர்த்தயி ராமா !நிர்த்தயி ராமா!!
பர்ண குடீரீத லவ குசா ஜனநா சீதைக்கு சாந்தி நிகேதனா!"

               என்று வால்மீகியிடம் சீதை அடைக்கலம் புகுந்ததையும், லவ குசனின்  பிறப்பே அவளுக்கு ஓர் ஆறுதல் நிலையயை அளிப்பது  போலிருந்ததையும் மிக அருமையான கணீர் என்ற குரலில் கன்னட மொழியை துளி பிழை இல்லாமல் பட முடிந்தது அம்மாவால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.  ஏன்  எல்லாருடைய நம்பிக்கையும் அதுவே .

         இராமாயண  கதையின் பின் பாதியை மிக அழகாக எழுதிய கவியின் நினைவோ இசை அமைப்பாளரின் நினைவோ  அந்த பாடலின் நடிகை கல்பனா நினைவோ நமக்கு வருவது இல்லை.

     நமது நினைவில் கனவில் மனதில் கற்பனையில் கலந்து இருப்பவர் ஒருவர் மட்டுமே  அவர்தான்  நமது எவெர்க்ரீன் சுசீலா அம்மா ..

அமுதம் தொடரும்.. .. ..


Tuesday, 1 November 2016

மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி!

"மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ! 
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!! 
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி!!"

இந்த வரிகளை என்னால் மறக்கவே முடியாது.   என்னால் மட்டுமல்ல. யாராலும்தான்.இந்த பாடல் அடிகள் சுசீலா அம்மாவுக்கென்றே அமைந்த வரிகள் எனலாம்.                 

        இன்னமும் இளமையோடும், குழலையும் தோற்க வைக்கும் குரல் இனிமையோடும் பாடிக்கொண்டிருக்கும் பைந்தமிழ் தேவதையின் குரல் நம்மை வசீகரிக்கும் பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று. 
         
                 அவளுக்கென்று ஒரு மனம் என்ற படத்தில் பாரதிக்கு அம்மா பாடிய பாடல் இது.  இப்பாடலின் மூலம்தான் யாரோ ஒருவரால் அம்மா அழுததாகவும், அதனால்தான் அவர் பின்னாளில் அவர் தன் இசை அமைப்பில் அவரை பாட விடாமல் செய்ததாகவும் படித்திருக்கிறேன்.  ஆனால் அதனால் நஷ்டம் அவருக்கே தவிர நமக்கல்ல .

               பெரும்பாலும் மேடையில் இந்தப் பாடலை பாடாத அம்மா ஒரு முறை இசைத் தொழிலாளர்கள் சங்கம் கூடிய மேடைமேடையில் இந்த பாடலை பாடினார்.  அதை அவரே தன இனிய குரலால் அந்த மேடையில் பதிவும் செய்தார் .

                   இந்தப் பாடலின் மயக்கும் இசை, சிறந்த படப்பிடிப்பு, பாரதியின் நடிப்பு இவையெல்லாம் வண்ணக்காவியமாய்  நம் நினைவில் நீங்க இடம் பிடித்துள்ளன.

                 "நீரில் மிதந்தது இளம் மேனி நான் நாடு விட்ட தாமரை அன்றோ!"  என்ற வரிகளில் ஏற்படம் சுகானுபவம் மறக்கவே முடியாது.  பாரதியின் குரலை போல் தன் குரலை மாற்றிப் பாட  எப்படித்தான் அம்மாவால் முடிந்ததோ!  ஆச்சரியம்தான்.  !!!

          "கன்னம்  சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையோ " என்று  தன காதலை மறைமுகமாக ததன்  காதலனுக்கு வெளிப்படுத்தும்  இடம்  மெய் மறக்க வைக்க கூடியது.

                இன்னும் இந்த பாடலை பற்றிய குறிப்புகளை  சொல்லிக்கொண்டே போகலாம்.  எனக்கு பிடித்த இந்த பாடல் பற்றிய விவரங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  மெய் சிலிர்க்க கூடிய ஒரு அனுபவம் இது.

                                                                                            அமுதம் தொடரும்.. .. .. 


Wednesday, 26 October 2016

விரஹா நூறு நூறு தரஹா!

               விரஹா நூறு நூறு தரஹா! விரஹா பிரேமா காவ்யதா சாஹி தரஹா !! இந்தப்பாடல்  எடக்கல்ல்லு குண்டதே  மேலே என்ற கன்னடப்படத்தில் இடம் பெற்ற  பாடல்.  ஜெயந்தி நடிக்க புட்டண்ணா கனகல்   இயக்கிய திரைப்படம் .

                  இப்போது கூட கன்னட திரையுலகின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.  ஒரு மேடை நிகழ்ச்சியில் கூட பி. சுசீலா அம்மாவும் நடிகை ஜெயந்தியும் பேசும் போது நான் திரைப்பட உலகில் புகழ் பெற்றதற்கு அம்மாவின் பாடல்களே காரணம் என்று  கூறினார்.

                 கணவனை  பிரிந்த காரிகை தன விரஹத்தை வெளிப்படுத்த பாடுகிற பாடல் அந்த பாடலில் வெளிப்படும் வேகம்  அந்த குரலில் வெளிப்படும் தாகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

              " அறவே முக்கி தரவே ஹாக்கி விரக சஹிதே சஹிதே தாநெந்திதே "
காதல் வேகம் புலப்பட அதை அடக்கியாள முற்பட முயலும் அந்த பெண்ணின் துயரை எப்படித்தான் அம்மாவால் வெளிப்படுத்த முடியும் என்ற ஆச்சர்யம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை! எப்படி என் விரகத்தை  சகித்து கொள்ள முடியும் என்ற ஆதங்கம் அப்பட்டடமாக வெளிப்படும்.

                      "பாவாந்தரங்கத்தல்லி  அல்லோல கல்லொலா
                   ப்ரேமாந்தரங்கத்தல்லி  எந்தெந்த கோலஹாலா!!
             ஸ்ருங்க  தன்வா பயஸி  ஹு வ்வு மனசே பாவே பாவே தானேந்திதே!
  இந்த வரிகளுக்கும் பின் வரும் ஹமிங் இருக்கிறதே அப்ப்ப்பப்பப்பா !!!
மனதுக்கும் விரஹத்தால் ஏற்படும் அல்லோலகல்லோலத்தையும்  காதல் கொண்ட உள்ளத்துள் ஏற்படும் கோலா கலத்தையும்  அம்மா வெளிப்படுத்தும் கோலாகலம் வர்ணிக்க முடியாதது.

                                     " கந்தர்வ லோக தல்லி  ரோமாஞ்ச ராத்திரி
                                        மதி சந்திர மஞ்சத்தல்லி   ரஸஜீவ ராத்திரி "
எண்டு இரவு நேர வேதனையை துடிப்பை வெளிப்படுத்தும் அந்தக்குரலின் இனிமையை ரசனையை இப்போதும் நம்மால் உணர முடியும்.

                நிற்காமல் ஓடும் நதி பூலை அசையாமல் ஓடும் ஆறு போல  அம்மாவின் குரல் விளைவிக்கும் விந்தை இன்னும் இன்னும் நினைத்து  பார்க்க கேட்க உள்ளம் மகிந்த கொண்டே  இருக்கிறது.

அமுதம் தொடரும்... ...

சூட்டைக் குறை!

                           சூட்டைக்  குறை 

பாலைவனம் பரவுவதால் சோலைவனம் குறைகிறது!
ஆலைகளோ வருவதால் அமுதமழை குறைகிறது!!
நிலத்தடி நீர் குறைகிறது நீள்  வானம் கிழிகிறது!
புலம் பெயரும் மக்களினால் புகைகிறது துடிக்கிறது!!

மணிக்குமணி மரக்கூட்டம் மறைகிறது உலகைவிட்டு!
மணமகனின் மண்டையில மரங்களின்றி புழுவெட்டு!!
ஆலைகளின் புகையால் காற்றினிலே சீர்க்கேடு!
ஆறுகளின் கழிவுநீரால்  நீருக்குப் பெருந்தட்டு!! 

குளிர்பதன சாடினத்தல் கிலோரகார்பன் பெருகுது பார்!
குளிர்நிறந்த துருவங்கள் குறைவின்றி உருகுதுப்பார்!!குளுகுளென இருந்த பூமி கொதிகும்பி ஆகுதுபார்!
குவலயத்தின் கடல் மட்டம் குடுகுடேன் உயருதுபார்!!

கடலோர நகரமெல்லாம் கடகடென மறைந்திடும் பார்!
சுடும் வெப்பக்க கதிராலே கடும்புற்று பரவிடும்பார்!!
ஓசோனின் கிழிவாலே உலகமெலாம் நடுங்குதுப்பார்! 
ஓயாமலுழைப்பதாலே இவையெல்லாம் நின்றிடும் பார் !!

சூரியனின் கொடுங்கதிர்கள் சுட்டுநம்மை எரிக்குதுபார்!
சூதில்லா  மக்கள் வாழ்வு சூட்டினாலே அழிந்திடும்பார்!
கொதிக்கின்ற கதிராலே புவிவெப்பம் உயர்ந்திடும்பார்!
கொள்ளு தினை தானியமும் விளையாமல் நின்றிடும் பார்! 

பசுமைக்குயிடில் வாயுவால் பசும்புல்லும் அழிந்திடும்பார்! 
பச்சிளம் குழந்தைகளும் பசியால் துடித்திடும்பார்!! 
 பார்முழுதும் நீருக்கேன் பல போர்கள் நடந்திடும் பார்!  
பனிமலைகள் உருகிப்பாரில் பெருவெள்ளம் பரவிடும்பார்!! 

சக டுவெள்ளம் கடுவறட்சி கடுங்குளிரும் நிலவிடும்பார் !
சுடுகதிரை உருவாக்கும் சுய நலமி மனிதனை பார் !!
எழில் நிர்ணயித்த மரம்தானேயே நட்டு நீயும் வளர்த்திடப்ர்பார்  !
எழிலி நிறை நீரும் கிட்டும்  ஏந்தியதை   வாழ்ந்திடப்பார்!!  


Friday, 21 October 2016

மலைகளில் சிறந்த மலை

மலைகளில் சிறந்த மலை 
மலைகளில் சிறந்த மலை மண்ணுலகோர் வணங்கும்மலை கலையணைத்தும் நிறைந்த மலை  மலை கன்ணனவன் அருளும் மலை மாநிலத்தில் உயர்ந்த மலை மன்னவரும் பணியு மலை பூவுலகோர் நாடும் மலை புண்ணியர்கள் வாழும் மலை!
ஏழைகளும் தேடும் மலை ஏற்றம் பலவும் தரும் மலை ஏந்திழையோர் பூக்காளெல்லாம் இறைவனுக்கே கொடுக்கும் மலை 
ஆழ்வார்கள் நடந்த மலைஆண்டவனின் பெரிய மலை ஆதரவாய் காக்கும் மலை ஆண்டாளும் போற்றும் மலை!

ஏழுமலைகள் ஒன்றாகி எல்லாரையும் காக்கும் மலை 
எல்லாவது மலையினிலே இறைவானவன் நிற்குமலை உலகத்து மலைகளில் உயர்ந்தோர்கள் வாலு மலை உன்னதத்தை அள்ளித்தரும் நாராயணன் திரியும் மலை!  

அலர்மேலு மாங்காயுடன் அன்புத்தெய்வம் அருளுமலை அலிபிரியின் வழியாக ஆன்றோர்கள் செல்லு மலை 
பல்லாண்டு பளப்பாடி பன்னிருவர் பணிந்த மலை பல்லாண்டுத் துயரெல்லாம் பனி போல  மறையும் மலை!

நாரணின்   நாமத்தை நாள்தோறும் சொல்லு மலை
நாலாயிரத்து பாடி நாமெல்லாம் பெருமாளை நாவார நாம் பாட நாமங்கள் அளித்த மலை நானிலத்து மக்களுக்கு நரகதியை நல்கு மலை!
பூவுலகம் முழுவதிலும் புகழ் கொண்ட புண்ய மலை பூதேவித்தாயாரும் புணடரீகம் அமர்ந்த மலை மகாலக்ஷ்மிதா தாயாகி மங்களங்கள் அளித்த மலை மகத்துவம் பல கொண்டு மகிமையுடன் திகழு மலை!

ஜகத்தினிலே சிறந்த மலை ஜகந்நாதன் வாலு மலை ஜனார்த்தனன் வசிக்கும் மலை ஜெயலட்சுமி வாலு மலை ஜெயமுண்டு பயமில்லை என ஜகத்தோர்க்கு உரைக்கு மலை ஜெகதீசன் அவன் நமது ஜென்ம வினை போக்கு மலை!

வேங்கடத்தின் பெருமை பேச பலஜன்மம் அருளு மலை வேங்கடவன் பெருமை சொல்ல ஒரு நா பூத மலை வெறும் வாயால் நாமம் சொன்னால் வேத முழுதும் தருமலை  
வேங்கடவன் என்ற தெய்வம் வேண்டியதை வழங்கும் மலை!

அதுவே நம் திருமலை!  அதுவே நம் திருமலை!! 













பாட்டு பாட வாயெடுத்தேன்

              குயிலுக்கு அறிமுகம் எதற்கு? அதன் குரலுக்குத்தான் அறிமுகம் எதற்கு? இது கருங்குயில் இல்லை வெள்ளைக்குயில்.  மரக்குயில் அல்ல மனிதக்குயில்.  பாடும் குயில் மட்டும் அல்ல. பேசவும் செய்யும் குயில். யாரை அது என்று தெரிகிறதா? கான சரஸ்வதி  நம் இசை அரசி நம் கண்ணால் காண முடிந்த இசை தேவதை சுசீலா அவர்களைத்தான்.  பாடுவதற்கென்றே பிறந்த குரல். பாசத்திற்கென்றே பிறந்த முகம் .பணிவதற்கென்றே அமைந்த குணம். கனிவதற்கென்றே பேசும் மொழி.  இன்னும் எத்தனை எத்தனையோ அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம். அம்மாவின் பாடல்களை கேட்பவன் அதனை ஆயுளுக்கும் மறக்க முடியாது. அப்பாடலின் உணர்ச்சிகளுடன் இணையாமல் இருக்க முடியாது.

           இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தெய்வத்தின் தெய்வம்  என்ற படத்திலிருந்து ஒரு பாடலை கேட்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை . "பாட்டு பாட வை எடுத்தேன் ஏலேலோ  அது பாதியிலே நின்னு போச்சே ஏலேலோ .  பேச ஒரு கிளி எடுத்தேன் ஏலேலோ அது பேசு முன்னே பறந்து போச்சே ஏலேலோ "

திருமணம் முடித்தவன் உடனே தன கணவனை இழந்து பாடும் பாடல் இது.  இதை பற்றி பல பதிவுகள் முன்பே வந்திருக்கலாம் .    ஆனால் இப்பாடல் வெளி வரும் பொது பிறந்திருக்காத  பல ஆண்டுகள் கழித்து பிறந்த.  அதற்கும் பல ஆண்டுகள் கழித்து கேட்ட ஒருவர் அப்பாடலில் இணையும் அதிசயம் சாத்யமாவதே ஒரு குரலால் தான்.  அக்குரலை பற்றி என்னவென்று சொல்ல? தெய்வத்தின் அனுகிரஹமன்றி வேறென்ன?

திருமணம் செய்து அனுப்பிய தந்தையின் சோகத்தை தன சோகத்துடன் இணைத்து பாடும் அக்குரலில் இருக்கும் துயரம்தான் எத்தனை அந்த நாயகியின் முகபாவம் . பாடும் தேவதையின் பனிக்குரல் இவை சேர்ந்து கண்ணீர்  தடுக்க இயலாது.

"வழியனுப்பி வைத்த தண்டை விழி மூடி தூங்கலையே" என்னும் போது ஒரு பெண்ணுக்கு திருமணம் முடித்து அக்கடா என்று அமரும் தந்தை அப்பெண் விதவை கோலத்துடன் மீண்டும் இல்லம் திரும்பி விட்டதை எண்ணி எவ்வாறு தூக்கமிண்டி துக்கத்துடன் தவிப்பாரோ அந்த ஏக்கத்தை நம் கண் முன் கொணர்வது அம்மாவின் குரல் அல்லவா?  அந்த வேதனையை தன குரல் மூலம் பிரதிபலித்து அனைவரையும் ஈர்க்கும் சக்தி அம்மா ஒருவரின் குரலுக்கே உண்டு.
வைதவ்யத்தின் கொடுமை யையும் விதவா விவாஹம் என்பது இல்லாத அக்கால கட்டத்தில் இனி தன வாழ்வு  எவ்வாறு முடியும் என்ற கவலையை  தாம்பத்ய சுகம் என்பதை இனி த்தான் வளவு காண முடியாது என்பதை 
" பூமாலை வாடலையே  ஏலேலோ பூட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ "  என்றும் "பள்ளியறை காணலையே பாலெடுத்து கொடுக்கலியே துள்ளி வந்து பாக்கலையே தொட்டு விளையாடலையே " என்றும் மனதை பிழியும் வரிகள் அம்மாவின் இந்த குறளி வரும் போது பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் கூடக்கண்ணீரால் கரைந்து ஓடுவர்.
இன்னும் இன்னும் வர்ணிக்கலாம் அம்மாவின் குரலையும் அதில் வழியும் அமுத இனிமையையும்.  ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ...? எனவே இப்போது நிறுத்தி கொள்கிறேன்.  வேறொரு பாடளுடன் சந்திக்கிறேன்.  

அமுதம் வழிவது தொடரும்....


Thursday, 20 October 2016

தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம்

தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?

வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு. ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள். பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி. பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம். இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.

வேலூர்க் கோட்டை

திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது. தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர். இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.

பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு. எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை. புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம். ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.


தற்போது மரப்பாலம் இல்லை. அகழியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் முதற் சுவர்; அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது. அதற்கும் உட்பகுதியில் யானை அல்லது தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.

மேலும் ஒரு சுவையான செய்தி என்னவென்றால் வேலூர் மாநகரத்தின் ஏழு அதிசயங்கள் என்றழைக்கப்படுவதில் இக்கோட்டையும் இடம் பெற்றுள்ளது. அந்த ஏழு அதிசயங்கள் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றதா?

1.
நீரில்லாத ஆறு
2.
மரமில்லாத மலை
3.
அதிகாரமில்லாத காவலர்
4.
அழகில்லாத பெண்கள்
5.
சுவாமியில்லாத கோயில்
6.
பணமில்லாத கஜானா
7.
அரசனில்லாத கோட்டை

என்பதாகும் இந்த ஏழு அதிசயங்களைச் சிலர் சில வேறுபாடுகளுடன் கூறுவதுமுண்டு.

இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது. இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது. பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.
மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன. ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன. கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.

அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது. மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது. ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது. நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.


மலைக்கோட்டைகள்

நகரைச் சுற்றிலும் நீண்டு வளர்ந்துள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ், சஜ்ஜத் முதலான மூன்று கோட்டைகள் ஏறுவதற்கு மிகக் கடினமானவை. சரியான படிகளும் இல்லை. ஆயினும் மேலே செனறால் அழகிய கருங்கற்களால் கட்டப் பட்ட சுற்றுச்சுவர்களுடன் கூடிய கோட்டைகள், இராஜா குளம், இராணி குளம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற பெரும் கிணறுகள். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபங்கள் என அழகு கொஞ்சுகின்றது. மேலும் மலையுச்சிகளிலிருந்து பார்க்கும் போது வேலூர் நகரத்தின் ஒரு பகுதி நமது பார்வைக்குப்படுவதும் மிகவும் அழகான காட்சியாகும்.

மணிக்கூண்டு

வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டு இன்று நகரின் மையத்தில் காய்கனி அங்காடியின் நுழை வாயிலாகக் காட்சியளிக்கின்றது. இந்த மணிக்கூண்டின் சிறப்புகள் இரண்டு. ஒன்று இன்னும் ஓடிக் கொண்டிருப்பது. அடுத்தது முதல் உலகப்போரின்போது வேலூரிலிருந்து போருக்குச் சென்று மாண்டவர்கள் பற்றியும், உயிர்பிழைத்தோர் பற்றியும் கூறும் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

முத்து மண்டபம்

கண்டியின் கடைசி தமிழ் அரசன் ஒருவனைத் தோற்கடித்த ஆங்கிலேயர்கள் அவனை வேலூரில் சிறையிட்டனர். அங்கேயே இருந்து மறைந்து போன அம்மன்னர் மற்றும் அவனது அரசியின் சமாதிகள் கேட்டபாரற்றுக் கிடந்தன. ஆனால் தற்போது அதன் மீது மிக அழகிய வடிவில் முத்துச்சிப்பி போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கட்டடம் மிக அழகானது. பௌர்ணமி நிலவில் பாலாற்றங்கரையில் இந்த வெள்ளை நிற மண்டபத்தைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது.


ஜலகண்டேசுவரர் கோவில்

http://www.muthukamalam.com/images/photo/vellorejalakanteswarartemple.jpg
இங்கு சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 400 ஆண்டு காலமாக பூஜைகளின்றிக் கிடந்தது. தென்னிந்தியாவிலேயே மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட இக்கோவிலின் கல்யாண மண்டபத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இம்மண்டபத்தை அப்படியே பெயர்த்துக் கொண்டு போய் இங்கிலாந்தில் நிருமிக்க முடிவு செய்து வரைபடமும் தயாரித்து மண்டபத்தைப் பிரிக்க முடிவு செய்து விட்டனர். ஆனால் ஏதோ காரணத்தால் இம்மண்டபத்தை ஏற்றிச் செல்ல வந்த கப்பல் முழுகி விட்டதால் இம்முயற்சி கைவிடப்பட்டது எனில் இந்த கோவிலின் அழகை உணரலாம். மேலும் இக்கோயிலுக்கு அடியில் நீராழி மண்டபம் ஒன்று அமைந்துள்ளதாக வயதானவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குச் செல்லும் வழி ஒரு கிணற்றுக்குள்ளே நீர் நிரம்பிக் காணப்படுகின்றதால் யாராலும் சென்று காண இயலவில்லை என்கின்றனர்.

வழித்துணைநாதர் கோவில்

வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது மரகதாம்பிகை சமேத மார்கபந்தீசுவரர் கோவில். மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இத்திருக்கோவிலில் கங்கை கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோவிலில் உள்ளது போன்ற சிம்மக்கிணறு ஒன்று உள்ளது. மேலும் பண்டைக் காலத்து தமிழ் மக்கள் நேரத்தை அறிய உதவும் கல்லாலான கடிகாரமும் உள்ளது. இந்தக் கோவிலுக்கும், ஜலகண்டேசுவரர் கோவிலுக்கும் இடையே சுரங்கம் இருப்பதாக நம்பப் படுகின்றது. இவ்விரு கோவில்களைப் பற்றியும் பல கதைகள் வழங்கப்படுகின்றன.

மசூதி

இக்கோட்டைக்குள்ளே 1516-ல் கட்டப்பட்ட சிறிய மசூதியும் உள்ளது. தற்போது இதில் யாரும் தொழகை நடத்தி வழிபடுவதில்லை.


தேவாலயம்

1814இல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் இந்நகரக் கோட்டைக்குள்ளேயே இருக்கின்றது. மிக அழகிய ஆங்கிலோ சாக்சனிக் கட்டடக் கலையமைப்புடன் கூடிய இத்தேவாலயத்தில் தற்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு நடக்கின்றது.

மகால்கள்

பாத்ஜா மகால், பேகம் மகால் என்று கூறப்படும் இரு அரசவை மண்டபங்களும் கோட்டைக்குள்ளேயே உள்ளன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற அளவுடையதும், ஓரளவே உயரமுடையதுமான தூண்களைக் கொண்ட இம்மகால்கள் சிலகாலம் மாவட்டாட்சியர் அலுவலகமாக இருந்தது. தற்போது நடுவணரசின் அகழ்வாய்வுத்துறையின் அரும்பொருட்காட்சியகம் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

பிற மகால்கள்

திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் இரு அரண்மனைகள் கோட்டைக்குள் இடம் பெற்றுள்ளன. இவை சில காலம் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையாகவும் பயன்பட்டது. காவலர் பயிற்சிக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கட்டிடங்களைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

அமிர்திக் காடுகள்

சுமார் 20 கி.மீ தூரத்தில் காணப்படும் அமிர்திக் காடுகள் மிக அழகிய சுற்றுலாத் தலமாகும். சின்னஞ்சிறிய ஒரு மிருகக் காட்சிசாலையுடன் இயற்கையழகு மிளிரும் குறுங்காடுகளும், கோடைக்காலத்தில் மட்டும் நீரோடும் ஒரு சிற்றருவியும் உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

பொற்கோவில்

http://www.muthukamalam.com/images/photo/velloregoldentemple.jpg
வடக்கே அம்ருதசரஸில் உள்ள பொற்கோவிலைப் போல சுமார் 1500 கிலோ பொன்னை (தங்கம்) பயன்படுத்தி மகாலட்சுமிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில். தற்போது தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மையமாகத் திகழும் இக்கோவில் ஒரு தனியார் அமைப்பால் நிருவகிக்ப்படுகிறது.

திருவல்லம் கோவில்

சுமார் எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பெற்ற தனுர்மத்யாம்பாள் சமேத வில்வநாதீசுவரர் கோவில் வேலூரிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. அழகான பொன்னையாற்றங்கரையில் அமைந்த இக்கோவில், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சுதை நந்திச் சிற்பம் கொண்டது என்கிற புகழ் வாய்ந்தது. இக்கோவில் ஒரு பாடல் பெற்ற தலமாகும்.

இரத்தினகிரி

http://www.muthukamalam.com/images/photo/rathinagirimurugantemple.jpg
பாலமுருகன் சுவாமி என்பவரால் பாலமுருகனுக்குக் கட்டப்பட்ட இக்கோவில் வேலூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயிலில் தமிழிலேயே வழிபாடு நடத்தப்படுவது இதன் சிறப்பாகும். பக்தர்களனைவரையும் அமரவைத்து வழிபட வைப்பதும் இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.

வள்ளிமலை

முருகப்பெருமானின் இரண்டாவது மனைவியாகக் கருதப்படும் வள்ளி பிறந்து வளர்ந்ததாகக் கூறப்படும் பகுதி. இயற்கையெழில் பொழியும் இப்பகுதியில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்படுகைகளும் குகைகளும் உள்ளன. நன்னூலை இயற்ற உதவிய அமராபரண சீயகங்கன் என்ற அரசனைப் பற்றிய கல்வெட்டும் இவ்விடம் உள்ளது.


பிற இடங்கள்

பிரமதேசமலை, மகாதேவ மலை, இராஜாத்தோப்பு அணை, மோர்தானா அணை, தாரகேசுவரர் கோவில், ஓடைப்பிள்ளையார் கோவில், தீர்த்தகிரி மலை, சத்துவாச்சாரி அருவி முதலான பல பகுதிகள் பழமைச் சிறப்பும் புதுமைப் பெருமையும் உடைய சுற்றுலாத் தலங்களாகும். இவ்வனைத்தையும் கண்டு மகிழ சுமார் மூன்று நாட்கள் தேவைப்படும். இங்கு தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உண்டு. இங்கு ஒரு பிரச்சினை கோடைக் காலங்களில் கடும் வெயிலும், குளிர் காலங்களில் கடும் குளிரும் இருக்கும். இவ்விரண்டு காலங்களுக்கும் இடைப்பட்ட நாட்களில் சென்று வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இனிமையான சுவையான அனுபவமாக இருக்கும்...